herzindagi
image

Winter Skin Care: குங்குமாதி தைலம் போதும்; குளிர்காலத்திலும் சருமத்தைப் பளபளப்பாக முடியும்!

குங்குமாதி தைலத்தை இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக சருமத்தில் தடவும் போது, ஈரப்பதத்தைத் தக்க வைத்து எப்போதும் பொலிவைத் தருகிறது.
Editorial
Updated:- 2025-11-27, 23:02 IST


பெண்கள் எப்போதும் நிலவு போன்று தங்களது முகம் ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதிகப்படியான மாசு, ஊட்டச்சத்துக் குறைபாடு, குளிர்ந்த காலநிலை போன்ற பல காரணங்களால் அவ்வப்போது சருமம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு அழகுநிலையங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளலாம். ஆனால் அனைவருக்கும் அழகு நிலையங்களுக்குச் செல்வது பிடிக்குமா என்பது தெரியாது? ஆயுர்வேத முறையில் முகத்தைப் பொலிவாக்கவும், சருமம் சார்ந்த பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாக குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவும். குளிர்காலத்தில் எப்படி சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவும்? எப்படியெல்லாம் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தலாம்? என்பது குறித்த விபரங்கள் இங்கே.

குளிர்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்கும் குங்குமாதி:

  • 21 ஆயுர்வேத மூலிகைகளால் தயார் செய்யப்படும் குங்குமாதி தைலம் இயற்கையான முறையில் சருமத்தைப் பொலிவாக்கும். குளிர்காலத்தில் வறண்டு விடும் முகத்தைப் பொலிவாக்க குங்குமாதி தைலத்தை பல வழிமுறைகளில் பயன்படுத்தலாம்.
  • குங்குமாதி தைலத்தை கொஞ்சமாக கையில் எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். கைகளால் நன்கு அழுத்தாமல் லேசாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்யும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளார்ந்து சருமத்தைப் பொலிவாக்குகிறது.
  • வறண்ட சருமம் கொண்டவர்கள் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தும் போது இரவு நேரத்தில் அப்ளை செய்யவும். மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டுக் கழுவினால் போதும்.

 மேலும் படிக்க: முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க இந்த கோல்டன் பேசியலை ட்ரை பண்ணுங்க!

 

  • குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தும் போது, முகத்தில் சீக்கிரமே வயதான தோற்றம் அளிக்கும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்க முடியும்.
  • குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு குங்குமாதி தைலம் உதவுகிறது. இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை வழங்குகிறது.
  • முல்தானி மிட்டி, குங்குமாதி எண்ணெய் கலந்து பேஸ் பேக் தயாரித்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே முகத்தைப் பொலிவாக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ

குங்குமாதி தைலம் எப்படி பயன்படுத்த வேண்டும்?

  • குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படும் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • முகத்தில் குங்குமாதி தைலம் பயன்படுத்துவதற்கு முன்னதாக மேக் அப் எதுவும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் சுத்தமான தண்ணீரால் நன்கு சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.

 மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க

  • குங்குமாதி தைலத்தின் சில துளிகளை மட்டும் கையில் எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது.
  • அதிக உணர்திறன் கொண்ட நபர்களும், முகத்தில் பருக்கள் உள்ள பெண்களும் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் முகத்தில் பருக்களை அதிகப்படுத்தும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com