
இன்றைய அதிவேகமான, தொழில்நுட்ப உலகில், ஒவ்வொரு குடும்பத்திலும் செல்போன் பயன்பாட்டு நேரம் மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளிடம் கூட இப்போது செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை இதில் காணலாம்.
அதிகமான நேரம் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மற்ற உடல் ரீதியான செயல்பாடுகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேறு விஷயங்களில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
செல்போன் பயன்படுத்தும் நேரத்தை சரியாக நிர்வகிப்பது என்பது, உங்கள் குழந்தையின் வயது மற்றும் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் தெளிவான விதிகளை பொறுத்தது. மிக இளம் வயதிலேயே அதிகப்படியான நேரம் செல்போன் பயன்படுத்தும் போது அவர்களின் தூக்கம் பாதிக்கப்படும். இதனால் சரியான வளர்ச்சி இருக்காது. அதன்படி, குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது சரியான நேரத்தை கணக்கிட்டு அதிக நேரம் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிணைப்பை பாதுகாக்கவும், தூக்கத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செல்போன் பயன்படுத்துவதற்கு சில விதிகளை உருவாக்கவும். குறிப்பாக, ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தும் போது மற்றும் படுக்கை அறையில் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
செல்போன் பயன்பாட்டில் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி, பெற்றோர் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதை பார்க்கும் குழந்தைகள், அதே நிலைக்கு எளிதாக பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனை தடுக்க தேவை இல்லாத நேரங்களில் குழந்தைகளின் முன்னிலையில் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் தவிர்க்கலாம்.

செல்போன் பயன்படுத்துவது என்பதை தேவை மற்றும் வேலைகளுக்காக என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கவும். உதாரணத்திற்கு கல்வி சார்ந்த விஷயங்களில் குழந்தைகளுடன் இணைந்து செல்போனை எப்படி பயன்படுத்தலாம் என்று எடுத்துக் கூறலாம். இது நேர்மறை தாக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்கும்.
இது தவிர சோர்வாக இருக்கும் போது அல்லது வேறு ஏதேனும் வேலை இல்லாமல் இருக்கும் போது குழந்தைகள் பெரும்பாலும் செல்போனை பயன்படுத்துவார்கள். எனவே, படம் வரைதல், அவர்களுடன் இணைந்து விளையாடுதல், புத்தகம் வாசித்தல் போன்ற காரியங்களில் அவர்களை திசை திருப்புங்கள்.
இது போன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com