வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற வேண்டுமா? அப்ப இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

தம்பதியினர் உறவில் நம்பிக்கை என்பது முக்கியமான ஒன்று. கணவன் - மனைவி இடையே எந்த விஷயத்தையும் மறைக்காதீர்கள்.

relationship tricks
relationship tricks

இந்தியாவில் சமீப காலங்களாக விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. வேலை பளு, பொருளாதார நெருக்கடி, சிறு வயது திருமணம், காதல் திருமணம், கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை போன்ற பல காரணங்களை விவாகரத்து கேட்டு வரக்கூடிய தம்பதிகள் கூறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றனர். இதனால் முழுமையாக பாதிக்கப்படுவது ஆண்களோ? பெண்களோ? இல்லை. அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் தான். இதெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைப் போன்றில்லாமல், கொஞ்ச நேரமாவது உங்களது துணையுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். இதோ தம்பதிகள் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிப் பெறுவதற்கான சில டிப்ஸ்கள் என்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

ways to solve relationship problems

தம்பதிகள்பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • உலகில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் அடித்தளம் தகவல் பரிமாற்றம் தான். முறையாக தகவல்களை தம்பதியினர் பரிமாறிக் கொள்ளவில்லையென்றால் அந்த உறவில் சிக்கல்கள் தான் நீடிக்கும். இதெல்லாம் முறையாக பின்பற்றாதது தான் அமெரிக்க தம்பதிகளின் விவாகரத்திற்கு முதன்மையாக காரணமாக அமைகிறது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றனர்.
  • கணவன் - மனைவில் உறவில் சண்டைகள் வருவது இயல்பு தான். ஆனால் சண்டையில் நீங்கள் பேசும் வார்த்தைகள் தான் முக்கியம். தேவையில்லாத பேச்சுகள் உங்களது உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும்.
  • பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயராது உழைக்கும் நாம், கொஞ்சமாவது உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் மனைவிகளை அழைத்துக் கொண்டு வெளியூர் பயணம் செல்வது, பிடித்த விஷயங்களை மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.
  • கணவன் மற்றும் மனைவிக்கு பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு முன் வரலாம். எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு மனைவிகளுடன் கொஞ்சம் பேசி பழகுங்கள். அவர்களுக்காக சில வேலைகளை மேற்கொள்ளுங்கள்.
  • பிறந்த நாள், காதலர் தினம், திருமண நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பிடித்த இடங்களுக்கு தம்பதியினர் சேர்ந்து பயணிக்கும் போது சந்தோஷமான மனநிலை உங்களுக்கு ஏற்படும்.
  • தம்பதியினர் உறவில் நம்பிக்கை என்பது முக்கியமான ஒன்று. கணவன் - மனைவி இடையே எந்த விஷயத்தையும் மறைக்காதீர்கள். சின்ன விஷயம் தானே என்று மறைத்து மறைத்து செய்யும் போது பிரச்சனை பெரிதாகிவிடும்.
time spend with kids

இதே போன்று மனைவியின் வேலைகளைப் பகிர்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், பிடித்த இடங்களுக்கு குடும்பத்துடன் மாதம் ஒருமுறையாவது தனியாக பயணித்தல் போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலே, குடும்ப உறவில் எவ்வித பிரச்சனையும் இன்றி வாழ முடியும் என்பது தான் நிதர்சன உண்மை.

Image source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP