
தமிழகத்தில் பல விழாக்கள் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் கார்த்திகை மாதம் வரக்கூடிய திருக்கார்த்திகையும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பௌர்ணமி தினத்தில் வரக்கூடிய பெரிய கார்த்திகை எனப்படும் திருக்கார்த்திகை நாளில் வீடுகளில் மற்றும் கோவில்களில் விளக்கேற்றி வழிபடுவது ஐதீகம். இருந்தப்போதும் வாழ்க்கையில் இதுவரை செய்த பாவங்களை அகற்றவும், வாழ்நாள் முழுவதும் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்றால் ஒருமுறையாவது திருவண்ணாமலை மகாதீப திருவிழாவைக் காண வேண்டும் என ஆன்மீக வாதிகள் தெரிவிக்கின்றனர். அந்தளவிற்கு திருவண்ணாமலை ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது? மகாதீபத்தின் சிறப்புகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
வாழ்க்கையில் ஒருமுறை நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருக்கோவிலாக உள்ளது திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயம். கைலாயத்தில் சிவ பெருமான் இருப்பதால் சிறப்பு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவண்ணாமலையைப் பொறுத்தவரை மலையாக சிவபெருமான் இருப்பதால் அது தான் பெரும் சிறப்பாக உள்ளது. மேலும் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஆலயம் பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை கிருத்திகையன்று மகாதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
மேலும் படிக்க: Karthigai Deepam 2025: திருக்கார்த்திகை நாளான இன்று வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?
இக்கோவிலைப் பொறுத்தவரை சிவபெருமான் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றினார் என்று வரலாறு கூறுகிறது.சிவபெருமான் தனது இடபுறத்தில் பார்வதி தேவிக்கு இடம் கொடுத்த அர்த்த நாதீஸ்வரராக காட்சியளித்ததும் இங்கு தான். எனவே தான் கார்த்திகை மாத விழாக்களில் ஒரு நாள் சிவபெருமான் பக்தர்களுக்கு அர்த்தநாதீஸ்வரர் போன்று அவதரிப்பார்.
அக்னி ஸ்தலமாக பார்க்கப்படும் திருவண்ணாமலை ஆலயத்தில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தைப் பார்ப்பதால் வாழ்க்கையில் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் அகலும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் தான் தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தருவார்கள்.
மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் கடவுளின் அருளைப் பெற வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?
நம்முடைய மற்றும் முன்னோர்களின் பாவங்கள் நீங்க பரணி தீபத்தை வீடுகளில் கார்த்திகை திருநாளுக்கு முந்தைய நாள் ஏற்றப்படும். ஆனால் திருவண்ணாமலை கோவிலைப் பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு பிரம்ம தீர்க்கரையில் பரணி தீபம் ஏற்படும். அதன் பிறகு சரியான மாலை 6 மணிக்கு றபௌர்ணமி திதி உச்சத்தில் இருக்கும் போது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பாரம்பரிய முறைப்படி ஏற்றப்படும் இந்த தீபத்தில் சிவனும், பார்வதியும் இணைந்து காட்சியளிப்பார்கள். அகந்தையும், அகம்பாவமும் இந்த தீபத்தோடு எரிந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதால் பக்தர்கள் நேரில் மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக மகாதீப திருவிழாவைக் கண்டு கடவுள் ஆசி பெறுகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com