Officer on duty : மலையாள சினிமாவின் மற்றொரு வேட்டையாடு விளையாடு; சேட்டன்ஸ் ஸ்பெஷல்

ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளிவந்துள்ள ஆபிஸர் ஆன் டூட்டி படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். அதிகரித்து வரும் போதை கலாச்சாராத்தால் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளையும் இப்படம் காண்பித்து இருக்கிறது.
image

ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சாக்கோ போன் நடித்து வெளிவந்த படம் ஆபிஸர் ஆன் டூட்டி. பிப்ரவரி 20ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரியாமணி, ஜெகதீஷ், வைஷக் சங்கர் ஆபிஸர் ஆன் டூட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மற்றொரு க்ரைம் த்ரில்லர் படம் இந்த ஆபிஸர் ஆன் டூட்டி. வாருங்கள் இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஆபிஸர் ஆன் டூட்டி கதைச் சுருக்கம்

பள்ளி, கல்லூரி பெண்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்கும் கும்பலை தேடிப் பிடிக்கும் கதையே ஆபிஸர் ஆன் டூட்டி. இது ஒரு பழிவாங்கும் கதையும் கூட.

ஆபிஸர் ஆன் டூட்டி விமர்சனம்

பணிநீக்கம் செய்யப்பட்ட குஞ்சாக்கோ போபன் மீண்டும் பணிக்கு சேரும் போது நகை மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கிறார். துரிதமாகும் விசாரணைக்கு இடையே அடுத்தடுத்த கொலைகள் நடக்கின்றன. குஞ்சாக்கோ போபன் குற்றவாளிகளின் பின்னணியை கண்டறியும் போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. பழிவாங்கும் நோக்கத்தில் போதை கும்பல் குற்றவாளிகள் கொலை செய்கின்றனர் என கண்டுபிடிக்கிறார் குஞ்சாக்கோ போபன். இதில் தனது குடும்பமும் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறியும் அவர் போதை பொருள் கும்பலை கண்டுபிடித்து பகையை தீர்த்து கொண்டாரா இல்லையா என்பதே ஆபிஸர் ஆன் டூட்டி

ஆபிஸர் ஆன் டூட்டி பாஸிட்டிவ்ஸ்

  • ஆரம்பத்தில் முரடணாக தெரியும் அதிகாரி குஞ்சாக்கோ போபனின் சோக பின்னணியை அறியும் போது கதாபாத்திரத்திற்கான வடிவமைப்பு நியாயம் சேர்க்கிறது.
  • சண்டை காட்சிகளும், பின்னணி இசையும் மிரட்டல். எங்கும் தொய்வின்றி படம் ஜெட் வேகத்தில் செல்வதற்கு இவை உதவுகின்றன.
  • போதைக் கும்பல் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து என அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
  • ஒவ்வொரு கொலைக்கும் சரியான விளக்கம் கொடுத்து முடிச்சுகளை அவிழ்த்த விதம் அட்டகாசம்.
  • பிரியாமணி, ஜெகதீஷ் முதல் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஆபிஸர் ஆன் டூட்டி நெகட்டிவ்ஸ்

  • போதை பொருள் பயன்படுத்துவோர் நரம்பியல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என படித்திருப்போம். இவர்கள் எப்படி காவல் அதிகாரிகளுக்கு இணையாக சண்டையிடுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
  • பல கொலைகள் செய்யும் போதை கும்பல் இறுதிக்காட்சியில் சிறையில் இருந்து வெளிவருகின்றனர். இது மிகவும் அப்பட்டமான தவறு.

ரேட்டிங் - 4.5 / 5

ஆபிஸர் ஆன் டூட்டி கேரளாவில் நடந்த உண்மை கதை என்றும் கூறப்படுகிறது. போதைக் கலாச்சாரம் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேடு. இது போன்ற படங்களை வரவேற்பது சமூகத்தின் கடமையாகும்.

மேலும் படிங்கபொன்மேன் விமர்சனம் : பொன் இல்லா பெண் அழகு; மிரட்டும் பசில் ஜோசப்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP