image

விடுதலை 2 திரைவிமர்சனம் : மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கென் கருணாஸ் நடித்திருக்கும் விடுதலை 2 படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு திரையரங்கிற்கு வரும் மக்களுக்கு  வெற்றிமாறன் அரசியல் வகுப்பு எடுத்திருக்கிறார்.
Editorial
Updated:- 2024-12-20, 19:04 IST

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. விடுதலை 1ஆம் பாகம் வெளியான சில நாட்களில் இரண்டாம் பாகமும் ஏறக்குறைய முடிந்துவிட்டது என இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால் திரையரங்கிற்கு ஏற்றார் போல் படத்தை மாற்ற வேண்டும் என 10 நாட்கள் சூட்டிங் ஆரம்பித்தது. 10 நாட்கள் 100 நாட்களாக மாறின. பட்ஜெட்டும் எகிறியது. எனினும் வெற்றிமாறனின் இயக்கம் மீது பலரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளை வெற்றிமாறன் பூர்த்தி செய்தாரா வாருங்கள் பார்க்கலாம்.

விடுதலை 2 கதை சுருக்கம்

பெருமாள் வாத்தியாரின் பின்னணி என்ன ? மக்கள் படை தலைவராகவும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய நபராகவும் உருவெடுத்தது எப்படி ? காவல்துறையில் சிக்கிய பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதே விடுதலை 2.

விடுதலை 2 திரைவிமர்சனம்

விடுதலை 1ஆம் பாகத்தில் கேமியோ ரோலில் நடிக்க வந்த விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் சூரியை ஓரங்கட்டி மொத்த படத்தையும் சுமந்து செல்கிறார். கிஷோர், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர். தமிழரசன், இளவரசு, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் பாராட்டுக்கள்.  முதல் பாதி யதார்த்தமாகவும், இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாகவும் செல்கிறது. வாத்தியாரின் கதையை கேட்ட பிறகு சூரி குற்ற உணர்ச்சியுடனேயே பயணிக்கிறார். வனத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் பிரமாதம்.

விடுதலை 2 படத்தின் பாஸிடிவ்ஸ்

  • ஜமீந்தார் காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றனர். கென் கருணாஸின் காட்சிகள் அசுரன் படத்தின் இடைவெளியை நினைவுபடுத்தியது. 
  • சமூக வளர்ச்சியில் கம்யூனிஸ தோழர்களின் பங்களிப்பை திரையில் அற்புதமாக காண்பித்து இருக்கிறார்கள்.
  • முடி வளர்ச்சி குறித்து மஞ்சு வாரியர் பேசும் பெண்ணியம் திரையரங்கில் கைதட்டல்களை பெற்றது. 
  • மக்களுக்காக போராடிய பல தலைவர்களின் மறைவுக்கு பிறகு உலாவும் கட்டுக்கதைகளின் பின்னணி குறித்து வெற்றிமாறன் எளிதாக விளக்கி இருக்கிறார். 

மேலும் படிங்க அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் திரைவிமர்சனம்; ஃப்யரா ? வைல்ட் ஃப்யரா ?

விடுதலை 2 படத்தின் நெகடிவ்ஸ்

ஒவ்வொரு காட்சியையும் விரிவாக கூற முயற்சித்தது படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. திரையரங்கிற்கு வரும் பலருக்கு அரசியல் தெளிவு இருக்காது என்ற எண்ணத்தில் படம் எடுத்துள்ளனர். 

சூரி கதாபாத்திரத்தை வெற்றிமாறன் இந்த படத்தில் முற்றிலும் மறந்துவிட்டார். முதல் பாகத்தில் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட மக்கள் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனரா என தெரியவில்லை ?

முதல்  பாதியிலேயே கம்யூனிஸ தோழரான கிஷோர் இறந்துவிடுகிறார். இரண்டாம் பாதியில் அவர் விஜய் சேதுபதியின் குழந்தையை கொஞ்சுவது போல் காட்சி இருக்கிறது. வெற்றிமாறன் எப்படி இதை கவனிக்காமல் போனார் ?

முதல் பாகத்தில் இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. விடுதலை 2ல் இளையராஜாவுக்கு வேலையே கொடுக்கவில்லை என்று சொல்லலாம்.

வசன கோர்பு சரியில்லை. இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கதையில் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பல காட்சிகள் தொய்வாக இருந்தது. 

ரேட்டிங் - 3.25/5

இங்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு, நிகழ்கால அரசியல் சூழல் எப்போதும் சமமான சமூகத்தை நோக்கி பயணிக்காது என்பதை ஆணித்தரமாக சொல்லிய வெற்றிமாறனுக்கு பாராட்டுக்கள்.

ஒட்டுமொத்தத்தில் விடுதலை 2 அரசியல் பேசும் ஒரு ஆவணப்பாடம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com