இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், அண்ணன் சுனில் நடித்துள்ள திரைப்படம் பெருசு. இப்படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் இலங்கை படத்தை இளங்கோ ராம் இயக்கியிருந்தார். எனவே பெருசு படம் ரீமேக் கதையாகும். இலங்கை பதிப்பு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றிருந்தது. தீபா ஷங்கர், பால சரவணன், சந்தினி தமிழரசன், நிஹாரிகா, கிங்ஸ்லி, விடிவி கணேஷ், முனீஷ்காந்த், விடிவி கணேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ட்ரெய்லர் பார்த்த பலருக்கும் இது ஒரு 18+ படம் என தெரிந்திருக்கும். பெருசு படத்தின் விமசர்னத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊரில் மிகப்பெரிய ஆளாக கருதப்படும் வைபவின் அப்பா இறந்துவிடுகிறார். அவருடைய இறப்பின் போது யாரும் எதிர்பாராத விஷயம் ஒன்று எழுந்துவிடுகிறது. அண்ணன் சுனிலும், தம்பி வைபவும் அப்பிரச்னையை எப்படி சமாளித்து தந்தையின் உடலை அடக்கம் செய்கின்றனர் என்பதே பெருசு படத்தின் கதை.
ஊருக்குள் கெளரவமாக சுற்றித் திரியும் வைபவின் அப்பா இயற்கை மரணம் எய்துகிறார். உறவினர்களுக்கு தகவல் சொல்லி வழக்கமான சம்பிரதாயங்களை மேற்கொள்ளலாம் என நினைக்கும் போது சிக்கல் ஒன்று எழுந்துவிடுகிறது. மருத்துவரை அழைத்து வந்தும் சிக்கல் இயல்பு நிலைக்கு திரும்பிய பாடில்லை. தந்தையின் மானத்தை காக்க யாருக்கும் தெரியாமல் பெரிய விஷயத்தை மூடி மறைத்து சம்பிரதாயங்களை ஆரம்பிக்கின்றனர். இறுதியில் உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் பெரிய சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. மானம் போகக்கூடிய பெரிய பிரச்னையை இருவரும் சமாளித்தார்களா ? இல்லையா ? என்பதே கிளைமேக்ஸ்.
ரேட்டிங் - 2.5 / 5
மேயாத மான் படத்திற்கு பிறகு வைபவிற்கு என்ன ஆனது என தெரியவில்லை. கதை தேர்வில் கவனம் செலுத்தினால் ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிங்க ஸ்வீட்ஹார்ட் விமர்சனம் : ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படம் எப்படி இருக்கு ?
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com