herzindagi
image

ஸ்வீட்ஹார்ட் விமர்சனம் : ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படம் எப்படி இருக்கு ?

சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள ஸ்வீட்ஹார்ட் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Editorial
Updated:- 2025-03-16, 21:23 IST

அறிமுக இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஸ்வீட்ஹார்ட். படத்தின் நாயகி கோபிகா ரமேஷ். மலையாள நடிகர் ரென்ஜி, அருணாசலேஷ்ரன், சுரேஷ் சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவும் செய்திருக்கிறார். 

ஸ்வீட்ஹார்ட் கதைச் சுருக்கம் 

காதலர்களான ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிடுகின்றனர். கோபிகா ரமேஷ் கர்ப்பமாகிறார். கருவினை கலைக்க அறிவுறுத்தும் ரியோ ராஜ் அதற்கு எடுக்கும் முயற்சிகளே ஸ்வீட்ஹார்ட்.

ஸ்வீட்ஹார்ட் விமர்சனம்

சிறுவயதில் பிரிந்து செல்லும் அம்மாவினால் இறுக்கமாக வாழத் தொடங்குகிறார் ரியோ ராஜ். காதல் வயப்பட்டாலும் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் தட்டிக் கழிக்கிறார். இதன் காரணமாக ரியோவும் - கோபிகாவும் பிரிந்துவிடுகின்றனர். ஹீரோயின் கர்ப்பமடைந்து பிரச்னையில் மாட்டுவதால் ஹீரோ கருக்கலைப்பு செய்ய அறிவுறுத்தி அதற்கு உதவ முயல்கிறார். இதில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுகின்றன. இறுதியில் ஹீரோ திடீரென மனம் மாறுகிறார். ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிவாகிறது. இதன் பிறகு ஹீரோவும் - ஹீரோயினும் சேர்ந்தார்களா என்பதே ஸ்வீட்ஹார்ட் படத்தின் கிளைமேக்ஸ்.

ஸ்வீட்ஹார்ட் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • கோபிகா ரமேஷ் யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரை வெறுப்பேற்றும் குழந்தை நட்சத்திரமும் சூப்பர். 
  • 30 நிமிடங்களில் முடிக்க வேண்டிய ஆந்தாலஜி படத்தை 2 மணி நேரத்திற்கு ஓரளவு தொய்வின்றி எடுத்ததற்காக பாராட்டலாம்.
  • ரியோ ராஜுடன் வரும் நண்பன் ஆங்காங்கே பேசும் வசனங்கள் கலகலப்பூட்டுகின்றன. 
  • இறுதிக்காட்சியில் குழந்தை வளர்ப்புக்கு துளசி சிவமணி பேசும் வசனம் பாராட்டத்தக்கது. 

ஸ்வீட்ஹார்ட் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • பிக்பாஸ் சீசன் 4ல் ஆரி - பாலாஜி முருகதாஸ் இடையே நடக்கும் சண்டையினை வேடிக்கை பார்ப்பார். இதை அப்படியே திரையில் மிகுந்த சோர்வுடன் பிரதிபலிக்கிறார். 
  • இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் சுமார் ரகம். 
  • இப்படத்திற்கு Non Linear காட்சிகளே தேவையில்லை. ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளில் திடீரென அங்கும் இங்குமாக வெட்டி ஒட்டியுள்ளனர். 
  • காதல் படம் பார்க்கும் போது இந்த ஜோடி சேர வேண்டும், பிரிந்தாலும் வலுவான காரணம் தேவை என நினைப்போம். இந்த படத்தில் அப்படியான காட்சிகள் இடம்பெறாதது மிகப்பெரிய மைனஸ். பல படங்களில் பார்த்து சலித்த காதல் காட்சிகளே ஸ்வீட்ஹார்ட் படத்திலும் இடம்பெற்றிருந்தது. 

மேலும் படிங்க  கிங்ஸ்டன் விமர்சனம் : ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதியின் புதையல் வேட்டை எப்படி இருக்கு ?

ரேட்டிங் - 2.25 / 5

சிவா மனசுல சக்தி எடுப்பதாக நினைத்து எக்கு தப்பாக படத்தை இயக்கியுள்ளனர். திரைக்கதையை வலுவாக அமைத்து காட்சிகளை மெருகேற்றி இருந்தால் டாடா படம் அளவுக்கு பேசப்பட்டு இருக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com