Thani Oruvan 2 Update : 8 வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் 2 அறிவிப்பு வெளியானது.. வில்லன் யார் தெரியுமா?

தனி ஒருவன் படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

thani oruvan  cast aanouncment
thani oruvan  cast aanouncment

கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படம் ஜெயம் ரவி கெரியரில் மைக்கல் என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இதில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். படத்தில் நடித்த பலருக்கும் தனி ஒருவன் திடைப்படம் பெரும் பாராட்டுக்களை வாங்கி தந்தது. படத்தின் கிளைமாக்ஸை வைத்து, தனி ஒருவன் 2 வெளியாகும் என அப்போதே ரசிகர்கள் கணித்திருந்தனர். இயக்குனரும் தனி ஒருவன் 2 நிச்சயம் எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

ஆனால் இதுக் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி சரியாக 8 வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பு, ஸ்பெஷல் டீசருடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, ஜெயம் ரவி, நயன்தாரா தொடருகின்றனர். முதல்பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கின்றனர்.

nayan jayamravi

முதல் பாகத்தில் சித்தார்த்தாக நடித்த அரவிந்த் சாமி இறக்க, அவர் விட்டு செல்லும் குளூவை வைத்து இரண்டாம் பாகம் கதையை தயாராகிறதாம். இந்த பாகத்தில் ஜெயம் ரவியை தேடி வில்லன் குழு வருகிறார்களாம். டீசர் வீடியோவில் ’நான் ஏன் இன்னும் என் எதிரியை தேடி போகல என்று ஜெயம் ரவி கேட்க, அதற்கு மோகன் ராஜா இந்த கதையில் எதிரியே உன்னை தேடி வருவான்” என கூறுகிறார்.

தனி ஒருவன் 2, மோகன் ராஜாவிற்கு 11வது படமாகும். தனது தம்பி ஜெயம் ரவி உடன் இது 7வது படம். நயன்தாரா உடன் இது 4வது படம். அதே போல் இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் யார் நடிப்பது என்ற கேள்வி தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை வெளியான தகவலில் படி, ஃபகத் ஃபாசில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த முறை தனி ஒருவன் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பான் இந்தியா கலாச்சாரம் அறிமுகமாகி இருப்பதால், தனி ஒருவன் 2 பான் இந்தியா மூவியாக வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தினி ஒருவன் 2 படத்தின் அடுத்த அறிவிப்புக்காக ரசிகர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர்.

இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP