நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பின்பு தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். தொகுப்பாளராக இருக்கும் போதே சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பின்பு ’3’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக நடித்திருந்தார். மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதையடுத்து தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.தற்போது முன்னணி ஹீரோவாக தமி்ழில் வலம் வருகிறார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா, குகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் மகன் குகனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : மொட்டைமாடியில் கிளாமராக போட்டோ ஷூட் செய்த நடிகை நந்திதா ஸ்வேதா!
இந்த போட்டோ ஷூட்டில் அனைவரும் ஒரே கலர் உடையை தேர்ந்தெடுத்து அணிந்துள்ளனர். விதவிதமாக போஸ் கொடுத்து ரசிக்க வைத்துள்ளனர். இந்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதற்கு கேப்ஷனாக ‘ஹேப்பி பர்த்டே டா தம்பி’ என பதிவிட்டுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com