மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜின் படங்களில் போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். வழக்கமான பாணியை தொடர்ந்தால் ரசிகர்கள் கடுப்பாகி விடுவார்கள் என்பதை புரிந்துகொண்ட லோகேஷ் இந்த படத்தில் தங்க கடத்தலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருப்பது கூலி படத்தின் டைட்டில் டீசரில் தெரிகிறது. சரி இந்த படத்திற்கும் 1981 வெளிவந்த தீ படத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம்.
தீ படத்தில் ரஜினி துறைமுகத்தில் கூலி வேலை செய்யும் நபராக நடித்திருப்பார். வறுமை காரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் தங்கம் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து கடத்தல் மன்னனாக மாறுவார். அதுவே கூலி டைட்டில் டீசரில் துறைமுக கிடங்கில் தங்கம் கடத்தும் கும்பலிடம் இருந்து தங்கத்தை மீட்கும் காட்சி உள்ளது.
தீ படத்தில் ரஜினியின் வாழ்க்கை சோறு உண்டு, சுகம் உண்டு, மது உண்டு, மாது உண்டு என்ற பாணியில் இருக்கும். இதே வரிகளை கூலியின் டீசரில் ரஜினி பேசுகிறார். ரங்கா படத்தில் கெட்டவனாக மாறிய பிறகு ரஜினி இதே வசனத்தை பேசுவார்.
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்... தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு... அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே! எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே! சோறுண்டு சுகமுண்டு மதுவுண்டு மாது உண்டு மனம் உண்டு என்றாலே சொர்க்க த்தில் இடம் உண்டு... போடா
தீ படத்தில் ரஜினி தனது இடது கையில் அணிந்திருக்கும் 786 எண் பொறித்த பேட்ஜ் அவரது உயிரை காப்பாற்றுவது போன்ற காட்சி இருக்கும். கூலியில் பேட்ஜில் இருக்கும் இரத்த கரையை ரஜினி துடைப்பது போன்ற காட்சி உள்ளது.
தீ படத்தில் ரஜினி துறைமுகத்தில் தங்கம் கடத்திய பிறகு மோட்டார் சைக்கிளில் தப்பிப்பது போன்ற காட்சி இருக்கும். அதுவே கூலியில் துறைமுகத்தில் நடக்கும் தங்கக் கடத்தலை தடுக்க ரஜினி மோட்டார் சைக்கிளில் வருவது போல தொடக்க காட்சி உள்ளது.
இதனால் கூலி படத்தை தீ படத்தின் தொடர்ச்சியாக லோகேஷ் எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் தீ படத்தின் இறுதிக்காட்சியில் ரஜினி தனது தாய் மடியில் இறந்துவிடுவார். அதனால் இரு படங்களுக்கும் தொடர்பு இல்லை என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இதைவிட கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. 1995ல் சரத்குமார், மீனா நடிப்பில் கூலி படம் வெளியாகியுள்ளது. எனவே லோகேஷ் கனகராஜ் எப்படி அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இந்த டைட்டிலை வாங்கினார் என்ற கேள்வி எழுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation