குக் வித் கோமாளி ஆறாவது சீசனில் நான்கு வார இடைவெளிக்கு பிறகு மூன்றாவது எலிமினேஷன் நடந்துள்ளது. ஏற்கெனவே சவுந்தர்யா சில்லுக்குரி, கஞ்சா கருப்பு சென்ற வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு போட்டியாளர் எலிமினேட் ஆகியுள்ளார். இந்த வாரம் செஃப் கெளஷிக் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் யூடியூப்பில் பிரபலமான செஃப் தீனா ஒரு ட்விஸ்ட்டுடன் மூன்றாவது நபராக செயல்பட்டார். பால் பொருட்களை மையமாக கொண்டு போட்டியாளர்கள் சமைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த வாரம் பேரிங்கில் பிரியா ராமன் - புகழ், சுந்தரி அக்கா - செளந்தர்யா, மதுமிதா - சர்ஜுன், விவசாயி நந்தகுமார் - குரேஷி, லட்சுமி ராமகிருஷ்ணன் - டைகர் தங்கதுரை, உமர் லத்தீப் - சுனிதா, ராஜு ஜெயமோகன் - சரத், ஷபானா - ராமர் இணைந்தனர். அட்வாண்டேஜ் மிக வித்தியாசமாக இருந்தது. அதிகளவு பசுமாடு பால் கறக்கும் போட்டியாளர் அட்வாண்டேஜ் வெல்வார் என அறிவிக்கப்பட்டது. இதில் நந்தகுமார் ஒன்றரை லிட்டருக்கு மேலாக பால் கறந்து அசத்தினார். ஷபானா 800 மில்லிக்கு மேல் பால் கறந்தார். 1 Vs 1 மோதல் என அறிவிக்கப்பட்ட நிலையில் அட்வாண்டேஜ் வென்ற நந்தகுமார் சீம்பாலுக்கு பதிலாக சிக்கன் எடுத்துக் கொண்டு சுந்தரி அக்கா, ராஜுவை சிக்கலில் மாட்டிவிட்டார். சீம்பால் கிடைத்த சந்தோஷத்தில் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிக்கனை மாற்றி பேரிடியை கொடுத்தார். ஷபானா தனக்கு கிடைத்த அட்வாண்டேஜை மறுத்தார்.
இந்த வார எபிசோடில் குட் வைஃப் வெப் சீரிஸ் குழு நடிகை பிரியாமணி, ஆரி பங்கேற்று ப்ரோமோஷன் செய்தனர். மதுமிதா Vs ஷபானா சேலஞ்சில் இருவரும் சிறப்பாக சமைத்து எலிமினேஷில் இருந்து தப்பினர். பிரியா ராமன் Vs உமர் சேலஞ்சில் பிரியா ராமன் ஜாப்பனீஸ் உணவை சமைத்து கலக்கினார். அட்வாண்டேஜை தனக்கு சாதகமாக பயன்படுத்திய விவசாயி நந்தகுமார் சிக்கன் ஹண்டி செய்து செஃப் ஆப் தி வீக் விருதை தட்டிச் சென்றார். சிக்கனே சமைக்காத லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த வார புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். சமைக்கும் போது அவருக்கு ஷபானா உதவினார். இறுதியாக ராஜு Vs சுந்தரி அக்கா சேலஞ்சில் ராஜு சுந்தரி அக்காவை நூலிழையில் முந்தி எலிமினேஷனில் இருந்து தப்பினார். முன்னதாக சுந்தரி அக்காவை நடிகர் ஆரி வெகுவாக பாராட்டினார். ராஜு வெளியேறினால் படம் நடிக்க சென்றிருப்பார், நான் வெளியேறினால் கடை வேலைகளை கவனிப்பேன் என கூறி போட்டியில் இருந்து சுந்தரி அக்கா எலிமினேட் ஆகினார்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com