குட் பேட் அக்லி தமிழகத்தில் ரூ 172.3 கோடி வசூல்; ஓபனிங் கிங் அஜித்குமார்

தமிழகத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் 2 வாரங்களில் 172 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் முந்தைய படங்களின் வசூலை குட் பேட் அக்லி திரைப்படம் முறியடித்துள்ளது.
image
image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. சுனில், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சிம்ரன், கிங்ஸ்லி, டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராப், சலார் கார்த்திகேயா, பிரபு உட்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அஜித் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் வெறித்தனமாக வரவேற்று கொண்டாடினர். தமிழ் புத்தாண்டையொட்டி குட் பேட் அக்லி வெளியானதால் குடும்பங்களும் திரையரங்குகளில் குவிந்தன. தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் 31 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வார வசூல் நிலவரத்தை குட் பேட் அக்லி படத்தின் விநியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

குட் பேட் அக்லி வசூல் ரூ 172.3 கோடி

தமிழகத்தில் முதல் 5 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. அதன் பிறகு ஏப்ரல் 18ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. முதல் வாரத்திற்கு பிறகும் அஜித் ரசிகர்கள், பொதுமக்கள் கொடுத்த வரவேற்பினால் குட் பேட் அக்லியின் வசூல் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் இரண்டு வார தமிழக வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளது. இதுவரை 172.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குட் பேட் அக்லி. குட் பேட் அக்லியின் வசூல் அஜித்தின் முந்தைய படங்களின் வசூலை முற்றிலும் தவிடு பொடியாக்கியுள்ளது.

மலேசியாவிலும் குட் பேட் அக்லி மாஸ்

மலேசியாவில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் 250 கோடி ரூபாயை கடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. கேரளா, கர்நாடகாவிலும் குட் பேட் அக்லி திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது. மே 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாகும் காரணத்தால் இந்த ஒரு வாரமும் குட் பேட் அக்லியின் வசூல் வேட்டை தொடரும். அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP