ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. திரிஷா, பிரியா பிரகாஷ் வாரியர், அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராப், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழகத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் சோலோ ரீலிசாகி இருந்தது. தமிழகத்தில் 9 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் 30.9 கோடி ரூபாய் என படத்தின் விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியானது. மகாவீர் ஜெயந்திக்கு தமிழகத்தில் விடுமுறை என்பதால் திரையரங்குகளில் தலா ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டன. திரையரங்குகளில் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தை காண முடிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் குட் பேட் அக்லியின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் குட் பேட் அக்லி 30.9 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அஜித் குமாருக்கு இது அதிகபட்ச ஓபனிங் படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு கேளரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலும் குட் பேட் அக்லி நல்ல வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. தமிழக வசூல் நிலவரம் வெளியிடப்பட்டு விட்டாலும் உலகளாவிய வசூல் நிலவரத்தை ஐதராபாத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. வரும் நாட்களில் உலகளாவிய வசூல் நிலவரத்தை வெளியிட வாய்ப்புள்ளது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் வரும் வாரத்தில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறைகளை சேர்த்து ஒட்டுமொத்த வசூல் எளிதில் 150 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் வாரத்திலேயே குட் பேட் அக்லி 100 கோடி வசூலை கடக்கும் என நம்பப்படுகிறது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தால் குட் பேட் அக்லி முதல் நாளிலேயே 35 கோடி வசூலை எளிதில் கடந்திருக்கும்.
மேலும் படிங்க Good Bad Ugly விமர்சனம் : அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட மாஸான பொழுதுபோக்கு படம்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com