யூடியூப் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக ஆக 27ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. கல்லீரல் தொடர்பான பிரச்னைக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன் பிஜிலி ரமேஷின் குடும்ப உறுப்பினர்கள் அவரது நண்பர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தனர். 2018ல் FUN PANROM பிராங்க் வீடியோவில் சித்து, நிஷாந்திடம் சிக்கியவர் இந்த பிஜிலி ரமேஷ்.
அந்த வீடியோவில் தன்னை தீவிர ரஜினி ரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். பாபா முத்திரை முதல் சும்மா போறவன பப்ளிக்கா லாக் பண்ணி, நீ மூடப்பா என பிஜிலி ரமேஷ் பேசியது இணையத்தில் வைரலானது. அதன் பிறகு பல மீம் பக்கங்களில் பிஜிலி ரமேஷ் டெம்ப்ளேட் ஆக மாறினார். அதென்ன பிஜிலி ரமேஷ் என கேட்டதற்கு தனது பேச்சு பிஜிலி வெடி போல இருக்கும் என்றார்.
அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் காட்சியில் இடம்பெற்றிருந்தார். இதை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, அமலா பாலின் ஆடை, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், ஜெயம் ரவியின் கோமாளி, யாஷிகா ஆனந்தின் படங்களில் நடித்தார். சின்னத் திரையிலும் பிஜிலி ரமேஷ் தடம் பதித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
சில மாதங்களுக்கு முன் நுரையீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெறத் தொடங்கினார். அப்போது அவருடைய மனைவி பிஜிலி ரமேஷின் நண்பர்களிடம் உதவி கோரியிருந்தார். இதனிடையே யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். தன்னுடைய உடல்நிலை பாதிப்பிற்கு குடிப்பழக்கமே காரணம் என்றும் தனக்கு நண்பர்கள் கூட உதவ முன்வரவில்லை என்றும் வருந்தினார். மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
யூடியூபர் வி.ஜே.சித்து பிஜிலி ரமேஷை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் குணமடைந்து அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த பிஜிலி ரமேஷ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான சினிமா கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்குHer Zindagi கிளிக் செய்யவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation