காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 14ஆம் தேதி பிக்பாஸ் நட்சத்திரங்களான பாலாஜி முருகதாஸ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் ஜேஎஸ்கே சதீஷ் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ஃபயர். முன்னதாக ஃபயர் படத்தின் போஸ்டர், டீஸர், பாடல்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் பரபரப்பை கிளப்பின. படத்தின் பிரீமியரை பார்த்துவிட்டு ஒரு பாட்டி பாலாஜி முருகதாஸை தாக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோவும் வெளியானது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ஃபயர் கதைச் சுருக்கம்
பிசியோதெரபி என்ற பெயரில் பெண்களை வசப்படுத்தி ஏமாற்றும் ஒரு இளைஞனும் அவன் பின்னணி நெட்வொர்க்கையும் காவல்துறை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே ஃபயர் படத்தின் கதை
ஃபயர் விமர்சனம்
பாலாஜி முருகதாஸ் பிசியோதெரபி மையம் நடத்தி வருகிறார். தன்னிடம் வேலை பார்க்கும் பெண், சிகிச்சைக்கு வரும் பெண்களின் பின்னணியை தெரிந்துகொண்டு நன்றாக பழகி பேசி அவர்களை பயன்படுத்திவிட்டு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார். பாலாஜி முருகதாஸின் சூழ்ச்சியை புரியாமல் பல பெண்கள் அவரிடம் சிக்கி கொண்டு பணத்தை இழக்கின்றனர். திடீரென ஒருநாள் பாலாஜி முருகதாஸ் காணாமல் போகிறார். அவரை தேடும் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறது. மிகவும் சர்ச்சையான வழக்கு தீர்வு இன்றி முடிவுக்கு வருகிறது.
ஃபயர் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை தைரியமாக இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.
- சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிங்கபாட்டில் ராதா விமர்சனம் : குடி குடியை கெடுக்கும் வாழ்க்கையை அழிக்கும்
ஃபயர் படத்தின் நெகட்டிவ்ஸ்
- திரைக்கதையில் அழுத்தம் இல்லாத காரணத்தால் ஃபயர் படத்தை 2 மணி நேர படமாக எடுத்திருக்க தேவையில்லை. அரை மணி நேர விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கலாம்.
- பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கும் படத்தில் ஆபாச காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
- சில கதாபாத்திரங்களின் டப்பிங் மோசமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தை விசாரிக்கும் போதே அவர்கள் உண்மையை மறைப்பதை இணையொத்த சம்பவங்களுடன் சொல்லி இருக்கலாம். ட்விஸ்ட் என்ற பெயரில் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்திற்கும் மீண்டும் மீண்டும் ஒரே காட்சியை காண்பிக்கின்றனர்.
- பாலாஜி முருகதாஸிற்கும் சிங்கம் புலிக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என விரிவாக விளக்கி இருக்கலாம்.
- சில அரசியல் நிகழ்வுகளை கிண்டலடிப்பதாக நினைத்து காட்சிகள் அமைத்துள்ளனர்.
படத்தின் ரேட்டிங் - 2 / 5
நேரடி விழிப்புணர்வு படமாக எடுத்திருந்தால் ஒட்டுமொத்த படக்குழுவின் முயற்சிக்கும் வெற்றி கிடைத்திருக்கும். 18 வயதுக்கு உட்பட்டோர் இந்த படத்தை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation