சென்னையில் பிறந்து தெலுங்கு திரையுலகில் ஐகான் ஸ்டாராக உருவெடுத்து புஷ்பா படம் மூலம் பேன் இந்தியா ஸ்டாராக உருவெடுத்த நடிகர் அல்லு அர்ஜுன் ஏப்ரல் 8ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் உலகளவில் 1800 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் யாருடன் இணைந்து பணியாற்ற போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸுடன் இணையும் மேஜிக் என்ற வரிகளோடு அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பொருட் செலவில் அவதார், அவெஞ்சர்ஸ் போல இந்த படம் உருவாகவுள்ளது.
அல்லு அர்ஜூன் - அட்லீ
புஷ்பா படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பிறகு கதை தேர்வில் கவனம் செலுத்திய அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்தின் இயக்குநராக அட்லீயை தேர்வு செய்துள்ளார். ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ சல்மான் கானை வைத்து படம் இயக்கப் போவதாகும் அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு முக்கிய கதாபாத்திரம் எனவும் பேசப்பட்டது. ஏதோ சில காரணங்கள் அப்படத்தின் பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லவில்லை. இதையடுத்து அட்லீ அல்லு அர்ஜுனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது அடுத்த படம் இந்திய சினிமாவை பெருமைப்பட வைக்கும் என்றும் அல்லு அர்ஜுன் கூறியிருந்தார். இது அல்லு அர்ஜுனுக்கு 22வது படமாகும். மேலும் அட்லீக்கு 6வது இயக்கம்.
அவதார் போன்ற யுனிவர்ஸ் படம்
இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 300-400 கோடி ரூபாய் செலவு செய்யப்படவுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் உள்ள லோலா நிறுவனத்திற்கு சென்று படத்தின் அடுத்தக்கட்ட பணிகளை பற்றி அல்லு அர்ஜுனும், அட்லீயும் ஆலோசித்துள்ளனர். அவதார், பிளாக் பேந்தர், அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன், அயன் மேன், டிரான்ஸ்பார்மர்ஸ், டெர்மினேட்டர் போன்ற பிரமாண்ட படங்களில் அந்த நிறுவனம் பங்காற்றியுள்ளது. இது ஒரு யுனிவர்ஸ் படம் என்றும் ஒரு உலகில் அவதார் படத்தில் வருவது போன்ற சக்திவாய்ந்த உயிரினங்களும் மற்றொரு உலகில் மனிதர்கள் வாழ்வது போன்றும் தொடர்புபடுத்தி எடுக்கவுள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழு பேசுகையில் அட்லீ கூறிய கதையை கேட்டவுடன் தலை சுற்றியதாகவும் இதற்கு முன்பு இதுபோன்ற கதையை எங்கும் படித்தத்தில்லை எனவும் பிரமிப்படைந்தனர்.
வெளியூர் ஆட்டக்காரனுக்கு உள்ளூர் பற்றி தெரியாது என்பது போல அட்லீயின் படங்களில் பிற படங்களில் சாயல் அதிகம் இருக்கும் என தெரியாமல் தொழில்நுட்ப குழுவினர் பேசுகின்றனர். படத்தை முடிக்கும் போது தொழில்நுட்ப குழு அல்லது அல்லு அர்ஜுனுக்கு நிச்சயம் சந்தேகம் எழும். அவதார் அல்லது மகதீரா சாயலில் இப்படம் இருக்கிறதே என்று.
மேலும் படிங்கAK வரார் வழி விடு, வின்டேஜ் அஜித்தை நினைவூட்டும் குட் பேட் அக்லி ட்ரெய்லர்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation