தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை மாநகர மக்களின் துயர்துடைக்க தன்னார்வலர்கள் களத்திற்கு வரத் தொடங்கிவிட்டனர். பெரும் நடிகர்கள் தங்களின் இயக்கங்கள், ரசிகர்கள் மூலமாக மக்களுக்கு உதவி வருகின்றனர். சைதாப்பேட்டை பகுதியில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார்.
Watch | சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்!#SunNews | #ChennaiRains | @rparthiepanpic.twitter.com/RADv71tSQk
— Sun News (@sunnewstamil) December 6, 2023
இது குறித்து எக்ஸ் தளத்தில் உணர்ச்சி வசப்பட்டு அரசாங்கத்தையும், மக்களையும் சிந்திக்க வைக்கும் பல கேள்விகளைப் பதிவிட்டுள்ளார்.
மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை? விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?
Good morning friends,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 7, 2023
நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா…
அடிப்படை தேவைகள், வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க செலுத்தும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு!
மேலும் படிங்க “கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் அன்பு கட்டளை
ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்குச் செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது.
நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை. அதைச் சீர் செய்யத் தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்! இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!
மேலும் படிங்க “தவறான நிர்வாகம்” தமிழக அரசை சாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ, ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல. சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்.
சாமானிய மக்களைப் போல நடிகர் பார்த்திபனும் மழை வெள்ள பாதிப்பு குறித்து தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com