நவரகிரங்களில் முதன்மையான குரு பகவான் சித்திரை மாதம் 28ஆம் தேதி 11, 20225 ஞாயிற்றுக்கிழமை அன்று 1.24 மணி அளவிலே ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ந்து இருக்கிறார். எல்லா ராசிக்கார்களும் எதிர்பார்த்திருந்த குரு பெயர்ச்சி வந்துவிட்டது. குருவின் பார்வையால் பலன் அதிகம் என்பதால் பொருள் வளம் பெருகும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டு, வாழ்வில் வசந்த காலம் வரப்போகிறது. குருவின் பார்வையால் சாதாரண மனிதர்கள் கூட சக்கர்வர்த்தியாக மாறுவார்கள். குரு அடுத்த ஆண்டு 26.5.2026 வரை மிதுன ராசியில் தொடர்வார். குரு பெயர்ச்சி 2025 எந்த ராசிக்கு என்ன பலன்களை கொடுக்கப் போகிறது என பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி 2025 பலன்
மேஷம்
இந்த அற்புதமான பெயர்ச்சியால் குரு உங்களுடைய ராசியில் மூன்று இடங்களில் பார்வையை பதிக்கிறார். இதனால் திருமண தடை அகலும், சகல பாக்கியம் கிடைக்கும், தொழில் வளர்ச்சி உறுதி, பயணங்கள் பயன் தரும். நீங்கள் வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம்
6,8,10 இடங்களில் குருவின் பார்வை பதிகிறது. இதன் காரணமாக புதிய வாய்ப்புகள் வரும், குரு உச்சம் பெறும் போது திருமண வாய்ப்பு கைகூடும், பூர்விக சொத்து தகராறு அகலும். சிவன், அம்பிகையை வழிபாடு செய்யுங்கள்
மிதுனம்
குருவின் பார்வையால் வீடு, உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். எல்லாம் நன்றாகவே அமையும். பிள்ளை வழியில் முன்னேற்றம் காண்பீர்கள். இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். தாராளமாக தொழிலை துணிந்து செய்யலாம். தென் திருப்பதிக்கு சென்று வழிபடவும்.
கடகம்
உங்களுக்கு பண விரயம் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள். இந்த குரு பெயர்ச்சியில் இடம் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள், தலைமை பதவி கிடைக்கும், இழப்புகளை ஈடு செய்ய நண்பர்கள் உதவுவார்கள். குரு உச்சம் பெறும் போது தொட்டது துலங்கும்.
சிம்மம்
இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கு லாபத்தை கொடுக்க போகிறது. தொழில் வளம் சிறக்கும், பிள்ளை வழியில் பெருமை சேரும், அயல்நாடு முயற்சி கூடும், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி
குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு எண்ணங்கள் நிறைவேற போகிறது. 10ல் குரு பகவான் வருகிறார். இதனால் உத்தியோக முன்னேற்றம், பண புழக்கம் நன்றாக இருக்கும், தாய் வழி ஆதரவு உண்டு, இடம் வாங்குவீர்கள். குரு பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு குதுகலமே.
துலாம்
குரு பெயர்ச்சியில் குரு பகவான் முதல் ராசியாக உங்களை பார்க்கிறார். உடல் ஆரோக்கியம் சீராகும், நினைத்ததெல்லாம் நிறைவேறும், கனவுகள் நினைவாகும், இடம் வாங்குவீர்கள். இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் வழிபடுங்கள்.
விருச்சிகம்
குரு பெயர்ச்சி உங்களுக்கு வெற்றி செய்திகளை கொடுக்கும். சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தொழில் ராஜ யோகம், வீடு வாங்கும் யோகம் உண்டு, குரு உச்சம் பெரும் போது அதி அற்புதமான பலன்களை பெறுவீர்கள். விநாயகரை வழிபடுங்கள்.
தனுசு
குரு பார்வை நேரடியாக பெறும் ராசிகளில் தனுசும் ஒன்று. விலகிச் சென்ற சொந்தங்கள் இணையும், ஆற்றமிக்க நபர்களால் ஆனந்தம், புதிய பொறுப்பு உறுதி, இழந்த செல்வத்தைப் பெறுவீர்கள், அயல்நாட்டு யோகமும் வரலாம். எல்லாமே சுப செலவுகளாக இருக்கும்.
மகரம்
6ல் குரு இருப்பதால் இல்லத்தில் நல்ல நிகழ்வு நடைபெறும், தொழில் முன்னேற்றம் உண்டு, திடீர் வாய்ப்புகாள் வரும். குரு பெயர்ச்சியில் ஒவ்வொரு நாளும் பொன் நேரமே. திருநள்ளாறு சென்று வழிபடுங்கள்.
கும்பம்
குரு பெயர்ச்சி உங்கள் ராசி புனிதப்படுத்துகிறது. உடல் ஆரோக்கியம் சீராகும், தடைகள் படிகளாக மாறும், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும், பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள், வாழ்க்கை தரம் உயரும். மார்த்தாண்ட பைரவரை வழிபடுங்கள்.
மீனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இழப்புகளை ஈடு செய்வீர்கள். தொழில் முயற்சிக்கு உதவி கிடைக்கும், இடமாற்றம் ஏற்படும், பொறுமையாக செயல்படுங்கள். எந்த துறையில் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். விரதம் இருந்து குரு பகவானையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபடுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation