இன்றைய காலகட்டத்தில் பலரும் அவதிப்பட்டு வரும் ஒரு நிலை தான் நீரிழிவு நோய் மற்றும் சர்க்கரை நோய். சர்க்கரை நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். இதை மருந்துகளால் முழுமையாக குணப்படுத்த முடியாது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் உணவில் பல விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். எந்தப் பொருட்களை உட்கொண்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும், எதை உட்கொண்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை நீரிழிவு நோயாளிகள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வரிசையில் உங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கிய பானம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நீரிழிவு நோய் பலரிடையே காணப்படும் பொதுவான நோயாக மாறிவிட்டது. இந்த நோயைக் கட்டுப்படுத்த, பல கசப்பான பொருட்களை உட்கொள்கிறோம். அவற்றில் பாகற்காயும் ஒன்று. சிலருக்கு இதன் கசப்புச் சுவை பிடிக்காது. ஆனால், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல், அவர்கள் இதைக் கட்டாயமாக உட்கொள்கிறார்கள். பாகற்காயில் வைட்டமின் C, துத்தநாகம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் A போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், உடல் பருமன், தைராய்டு போன்ற பல பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது.
பாகற்காயின் கசப்புச் சுவை காரணமாக, பலர் இதை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். இதனால், அவர்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்கின்றனர். பாகற்காயின் கசப்பு சுவை பிடிக்கவில்லை என்றால், கசப்பில்லாமல் சுவையாக பாகற்காய் சாறு தயாரித்து உட்கொள்ளலாம். இப்போது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கசப்பான பாகற்காயை நேரடியாக சாப்பிட வேண்டியதில்லை. மாறாக, சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பாகற்காய் ஜூஸ் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் கசப்பு சுவை குறைவாக இருக்கும். மேலும், இதைக் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை குறைக்கலாம்.
இந்த பாகற்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இதை குடித்த பிறகு ஒரு மணி நேரம் உணவு எதுவும் சாப்பிட கூடாது. அதே போல இதை தொடர்ந்து 1 வாரம் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com