உடல் ஆரோக்கியத்தில் வாய்வழி சுகாதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் சாப்பிடும் உணவுகள் வாயில் பற்களால் மென்று எச்சிலுடன் கலந்து அதன் பிறகே வயிற்றுக்கு செல்கிறது. காலை எழுந்தவுடனும் இரவில் தூங்கும் முன்பாகவும் பல் துலக்குவது நல்லது. சில நேரங்களில் பல் துலக்கி கீழே துப்பினல் பேஸ்ட் எச்சிலுடன் இரத்தம் கலந்து வரும். இது எளிதில் கடக்க கூடிய விஷயமல்ல, கவனிக்க வேண்டிய விஷயம். பற்களை அழுத்தி தேய்ப்பதால் இரத்தம் வருவதாக நினைக்கிறோம். இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. தொடர்ந்து இரத்தம் வந்தால் ஈறுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அர்த்தம். உங்கள் உடலில் ஏதோ குறைபாடு இருப்பதை ஈறுகளில் இருந்து வெளியாகும் இரத்தம் உணர்த்துகிறது. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
பல் துலக்கினால் ஈறுகளில் இருந்து இரத்தம் வருவதற்கு உடலில் வைட்டமின் சி குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம். பற்களுக்கும் வைட்டமின் சி-க்கும் என்ன தொடர்பு என குழம்பாதீர்கள். ஈறுகளில் திச்சுகளை வலுவாக வைத்திருக்கவும் பாதிக்கப்பட்டால் சரி செய்வதற்கும் வைட்டமின் சி அவசியமானது. வைட்டமின் சி உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது பற்கள், ஈறுகளை வலுவாக வைத்திருக்கும். வைட்டமின் சி குறைபாடு ஏற்படும் போது ஈறுகள் வலுவை இழக்கும். இதன் காரணமாக பல் துலக்கும் போது இரத்தம் வெளியாகிறது. தொடர்ந்து இரத்தம் வந்தால் மருத்துவரை அணுகவும்.
ஈறு அழற்சி (Gingivitis) நோய் என்பது ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பற்கள், ஈறுகளை சுற்றி பாக்டீரியாக்கள் தேங்கும் போது இப்படி நடக்கும். பல் துலக்க தவறினால் பற்காறை தொடர்ந்து பற்களில் தேங்கும். இது ஈறுகளில் வீக்கத்தை அதிகரிக்கும். பல் துலக்கும் போது ஈறுகள் சிவப்பு நிறத்தில் மாறி இரத்தம் வெளியேறும்,
நம் ஈறுகள் மென்மையானவை. பற்கள், ஈறுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் எப்படி பல் துலக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் பல் துலக்கியின் தரத்தையும் பார்த்து வாங்கி பயன்படுத்தவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com