herzindagi
image

வீட்டு சுவற்றில் கிறுக்கும் குழந்தைகள்; கிரேயான்ஸ் கரைகளை அகற்றும் எளிய வழிமுறைகள்!

வீட்டுச்சுவற்றில் குழந்தைகள் கிறுக்கி வைத்துள்ள கிரேயன்ஸ் கரைகளை அகற்றுவதற்கு வெள்ளை அடிக்கவோ அல்லது பெயிண்ட் அடிக்கவோ தேவையில்லை. வீட்டில் பயன்படுத்தும் சில பொருள்கள் போதும்
Editorial
Updated:- 2025-10-25, 23:41 IST

குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீடுகளும் எல்லோரோ சிற்பங்கள் தான் என்பதற்கு ஏற்ப கிரேயான்ஸ்களைக் கொண்டு சுவற்றில் வண்ணம் தீட்டி வைப்பார்கள். நன்றாக வரையத் தெரியுதோ? இல்லையோ? குழந்தைளின் கைகளில் கிரேயான்ஸ்கள் கிடைத்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுவற்றில் ஏதாவது வரைந்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி சுவற்றில் வரையும் போது அவர்கள் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

குழந்தைகளின் சந்தோஷம் தான் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்பதால், சுவற்றில் கிறுக்கும் போது எவ்வித தடையும் சொல்ல மாட்டார்கள். இதற்காக படிந்துள்ள கிரேயான்ஸ் கரைகளை அப்படியே விட்டு விட்டால் நிச்சயம் வீட்டுச்சுவர் நிச்சயம் பழுதடைந்துவிடும். இவற்றை சரி செய்யும் வேண்டும் என்றால் மீண்டும் வீட்டில் வெள்ளை அடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சில பொருட்கள் போதும். என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: பெண் குழந்தைகளை இப்படி வளர்த்துப்பாருங்கள். நிச்சயம் தைரியமாக இருப்பார்கள்!

வீட்டுச்சுவற்றில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும் முறைகள்:

சுவர்களில் உள்ள கிரேயான்ஸ் கரைகளை அகற்ற வேண்டும் என்றால், கண்ணாடியை தூய்மை செய்யும் லிக்யூட் சிறந்தாக அமையும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கண்ணாடியை தூய்மை செய்யும் லிக்யூட் மற்றும் சிறிதளவு தண்ணீர் செய்துக் கொள்ளவும். சுவற்றை துணியால் துடைத்தப் பின்னதாக ஸ்ப்ரே பாட்டிலைக் கொண்டு தெளித்துவிடவும். பின்னர் ஈரத்துணியால் துடைத்தெடுத்தால் போதும் கிரேயான்ஸ் கறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம்.

மேலும் படிக்க: பெற்றோர்களே.குழந்தைகளை மகிழ்விக்க நீங்கள் செய்ய வேண்டியது?

  • அடுத்தாக வீட்டுச்சுவற்றில் வரைந்திருக்கும் கிரேயான்ஸ் ஓவியங்களை அகற்ற டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்தலாம். முதலில் சுவற்றை நன்கு சுத்தம் செய்த பின்னதாக டூத் பேஸ்ட்டை தேய்த்து ஈரத்துணியால் துடைத்தெடுத்தால் போதும். கிரேயான்ஸ் கறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடக்கூடும்.
  • பேக்கிங் சோடாவும் சுவற்றில் படிந்துள்ள கிரேயான்ஸ் கறைகளை அகற்ற உதவியாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து சுவற்றில் தெளித்த பின்னதாக, துணியால் துடைத்தெடுக்கவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது கரைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்.
  • துணிகளை துவைக்கப் பயன்படுத்தப்படும் லிக்விட்டுகளும் சுவற்றில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com