பெற்றோர்களே.குழந்தைகளை மகிழ்விக்க நீங்கள் செய்ய வேண்டியது?

குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்கள் செய்தாலும் அவர்களைப் பாசமாக அரவணைக்க வேண்டும். 

happy parenting

பெற்றோர்களாகிவிட்டால் அனைத்துப் பொறுப்புகளும் தலையில் வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து மாறி விடுகின்றனர் சில பெற்றோர்கள். இதனால் தான் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல், அவர்கள் என்ன செய்தாலும் வெறுப்பாகிறார்கள். பொதுவாக குழந்தைகள் என்றாலே ஒடி ஆடி விளையாடுவது தான்.

அங்கே போகாதே, அதை செய்தே என எந்தவொரு விஷயத்தையும் ஜாலியாக செய்ய விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பெற்றோர்களாக நீங்கள்? இது உங்களது நிம்மதியை மட்டுமல்ல, குழந்தைகளின் சந்தோஷம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும். இதைத் தவிர்த்து விட்டு உங்களது குழந்தைகளை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்க விரும்பினால், இதோ சில விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.

enjoy kids

மகிழ்ச்சியானக்குழந்தைகளை வளர்க்கும் முறை:

அரவணைப்பு:

குழந்தைகள் எப்போதுமே விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிகம் ஆசைப்படமார்கள். பெரியவர்களை விட குழந்தைகள் தான் வீட்டில் சூழலைப் புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்ளவார்கள். அதே சமயம் அவர்கள் அதிகமாக எதிர்ப்பார்ப்பது பெற்றோர்கள் நம் மீது அதிக பாசமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் சின்ன சின்ன விஷயங்கள் செய்தாலும் அவர்களைப் பாசமாக அரவணைக்க வேண்டும். கட்டியணைத்து நீங்கள் கொடுக்கும் முத்தத்திற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இந்த செயல் குழந்தைகளை மகிழ்வுடன் வைத்திருக்கும்.

பேசுவதைக் கவனித்தல்:

குழந்தைகள் என்றாலே ஏதாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். போதும் பா, நிறுத்துப் பா என சொல்வதை முதலில் தவிர்க்க வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதைக் காது கொடுத்து கேட்கவும். குறிப்பாக குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அதற்கு நாம் பதிலளிக்கும் நடைமுறை அவர்களை மிகவும் மகிழ்வாக்கும்.

நேரத்தைச் செலவிடுதல்:

பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அம்மா- அப்பா இருவருமே வேலைக்குச் செல்லும் நிலை உள்ளதால் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட முடியாது. என்ன தான் பாசமாக தத்தா, பாட்டிகளுடன் வளர்ந்தாலும் பெற்றோர்களுடன் நேரத்தைச் செலவிடாது அவர்களுக்குத் தனிமையாக மற்றும் விரக்தியான உறவைத் தரக்கூடும். எனவே முடிந்தவரை வாரத்திற்கு ஒருமுறையாவது அருகில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

children happy

முன்மாதிரியாக இருத்தல்:

பெற்றோர்களில் சிலர் தவறுகள் செய்வது என்பது இயல்பானது தான். அதை குழந்தைகள் முன்னதாக காட்டிக் கொள்ளக்கூடாது. என் பெற்றோர்கள் எனக்காக என்ன செய்தாலும் நல்லது தான். அவர்கள் நல்லது தான் செய்வார்கள் என்று அவர்கள் பெருமைப்படும் அளவிற்கு சிறந்த உதாரணமாக இருக்கவும்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குழந்தைகளின் கத்துவதோ, அவர்களை அடிப்பதோ கூடாது. இந்த செயல்களெல்லாம் அவர்களின் மனநிலையைப் பாதிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தராது. எனவே குழந்தைகளுடனா உங்களது உறவை மேம்படுத்தவும், மகிழ்ச்சியை மேம்படுத்தவும் இந்த விஷயங்களைக் கட்டாயம் பின்பற்றுங்கள்.

Image source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP