கார்த்திகை மாதக் கோலங்கள் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதில் மிக முக்கியமான ஒன்று வாசலில் கோலம் இட்டு, கோலங்களுக்கு இடையே விளக்குகள் வைத்தி வழிப்படும் நிகழ்ச்சியாகும். கார்த்திகை தீபத்திற்கு விளக்கு வடிவில் கோலம் இடுவது மிகவும் பிரபலமான ஒனறாகும். ரங்கோலி, புள்ளிக்கோலம் மற்றும் கம்பி கோலம் என்றும் அழைக்கப்படும். தென்னிந்திய பாரம்பரியத்தின் ஒரு அங்கமான கோலங்கள் இருந்து வருகிறது. அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கு கோலம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக இந்த கார்த்திகை மாத கோலம். இந்த கார்த்திகை தீபத்திற்கு இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் கோலங்களை கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடவும்.
மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திற்கு வீடுகளை வண்ணமயமாக அலங்கரிக்க சிம்பிள் டிப்ஸ்
கார்த்திகை தீபத்திற்கு வீட்டை விளக்குகள் கொண்டு அலங்கரிக்க செய்வதற்கு முன் வாசலில் இடப்போகும் கோலம் என்ன என்பதை தீர்மானிக்க, உங்களுக்கான அழகிய கோலங்கள் இங்கே
முதலில் ஐந்து அடுக்கு வட்டத்தை வரைந்துகொள்ளவும். அதில் முதல் இரண்டு அடுக்கு வட்டத்தில் வெவ்வேறு வண்ண நிறத்தை நிரப்ப வேண்டும். முன்றாது வட்டத்தில் சிறு சிறு பகுதிகளாக பிரித்து அதில் வண்ணங்களை இட்டு முழுமைப் படுத்தவும். அடுத்த அடுக்குகளில் பூ வடிவத்தை கொண்டு முழுமைப்படுத்தவும். இறுதியாக வட்டங்களுக்கு மேல் பூக்களை வரைத்து கோலத்தை முழுமைப் படுத்தி முடிக்கவும். இந்த ரங்கோலி பார்க்க பிரமாண்டத்தையும், வரைய எளிமையாகவும் இருக்கும். இந்த கோலம் கண்டிப்பாக உங்கள் வீட்டு வாசலில் உங்களை முழுமை அடைய செய்கிறது.
Image Credit: pinterest
இந்த அழகிய கோலத்தை வரைய முதலில் சிறு வட்டம் வரைந்து, மேலே சிறு பூக்கள் இதழ்களை வரைந்துகொள்ளவும். அதன் மேலே பெரிய வட்டம் அரைந்து, மேல் புறமாகப் பெரிய இதழ் பூக்கள் வரைய வேண்டும். பூக்களின் இதழ்களுக்கு இடையில் நான்கு திசையை நோக்கிப் பார்க்கும் வடிவில் அகல் விளக்கு வரைந்துகொள்ளவும். இரண்டு அகல் விளக்கு இடையில் மாங்காய் வடிவம் இட்டால் மேலும் பார்க்க அழகாக தோன்றும். இந்த கோலம் பார்க்க ஒரு மன நிறைவைத் தரக்கூடியதாக இருக்கும்.
Image Credit: pinterest
ஒரு பெரிய அகல் விளக்கை வரைந்து கொள்ளவும். அகல் விளக்கு ஒரு புறத்தில் மயில் முகத்தை வரைந்து, மறுபுறத்தில் மயில் இறகுகள் வரைய வேண்டும். அகல் விளக்கைத் தங்கிக் கொள்வது போல் அடிப்பகுதியில் தாமரை வடிவில் பூக்கள் வரைந்து கோலத்தை நிறைவு செய்யலாம். மேலும் அழகிற்கு சில பூக்கள், புள்ளிகள் மற்றும் வளைந்த கொம்புகள் போன்ற வடிவம் கொடுத்து நிறைவு செய்யவும்.
Image Credit: pinterest
ஆறு வடிவ நீட்டு பூக்கள் இதழ்களை வரையவும். இரண்டு பூக்களின் இதழ்களுக்கு இடையில் பெரிய அகல் விளக்கு வரைந்துகொள்ளவும். அகல் விளக்கு வண்ணங்கள் இட்டு, மேலும் சில பூக்கள், கொம்புகள், புள்ளிகள் வரைந்து அழகு சேர்க்கலாம்.
Image Credit: pinterest
மேலும் படிக்க: இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி கட்டிலுக்கு அடியில் சுத்தம் செய்வதை எளிதாக்கலாம்
ஒரு கொம்பு வரைந்து, அதன் மேல் பெரிய அகல் விளக்கு வரையவும். அகல் விளக்கை அழகு படுத்த வெவ்வேறு வண்ணங்கள் இட்டு மேலே பூக்கள் போன்று வரைந்து அழகு சேர்க்கவும். அகல் விளக்கு இரண்டு பக்கமும் தாமரை இதழ்களை வரைந்து முழுமைப்படுத்தலாம். அகல் விளக்கைத் தங்குவது போல் பூக்கள் வரைந்து முடிக்கலாம்.
Image Credit: pinterest
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: pinterest
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com