கட்டில் என்பது நம் வீடுகளில் உள்ள மிகப்பெரிய தளபாடங்களில் ஒன்றாகும். கட்டில் சுத்தம் செய்ய நகர்த்த கடினமாக இருக்கும். இதனால் இந்த பகுதியை பெரிய அளவில் சுத்தம் செய்ய முடியாமல் போகிறது. இதனால் எளிதில் கட்டிலுக்கு அடியில் நிறைய அழுக்கு மற்றும் தூசிகளை எளிதில் சேரும் இடமாக இருக்கிறது. படுக்கையறை சுத்தமாக இருக்க கட்டிலுக்கு அடியில் சுத்தம் செய்வது முக்கியம். இந்த கட்டுரையில் கட்டிலுக்கு அடியில் சுத்தமாக வைத்திருக்க உதவி குறிப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
படுக்கைக்கு அடியில் சுத்தம் செய்வதற்கான சில எளிய தந்திரங்களைப் பயன்படுத்தி கட்டிலுக்கு அடியை சுத்தமாக வைத்திருக்கலாம்.
மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திற்கு வீடுகளை வண்ணமயமாக அலங்கரிக்க சிம்பிள் டிப்ஸ்
பெரும்பாலும் வீடுகளில் கனமான கட்டில் பயன்படுத்துகிறோம். அவற்றை முழுமையாக நகர்த்த கடினமாக இருப்பதால் சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு கட்டிலை முழுமையாக அகற்ற முயல்வதை விட, அதை பகுதிகளாக மாற்றுவதை நீங்கள் பரிசீலிக்கலாம். ஹெட்போர்டு மற்றும் ஃபுட்போர்டை அகற்றுவதன் மூலம் தொடங்கவும், பின்னர் விளக்குமாறு எடுத்து கட்டிலுக்கு அடியில் தரையை சுத்தம் செய்யலாம். படுக்கைக்கு அடியில் தரையை சுத்தம் செய்ய சிறிய வெற்றிட கிளீனரையும் பயன்படுத்தலாம். கடினமான கறைகளுக்கு ஈரமான துடைப்பான் பயன்படுத்தலாம்.
Image Credit: Freepik
ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் இரண்டு தேக்கரண்டி சோப்பு மற்றும் சில துளிகள் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையானது கடினமான கறை மற்றும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துணியை எடுத்து இந்த கலவையில் நனைக்கவும். போதுமான அளவு பிழிந்து பின்னர் மேற்பரப்பை சுத்தம் செய்யவும். படுக்கையின் மேற்பரப்பையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்வதற்கும் இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம். மேலும், உலர்ந்த துணியை எடுத்து படுக்கையை சுத்தம் செய்யலாம். தரை உங்களுக்கு எட்டாத தூரத்தில் இருந்தால், நீங்கள் ஒரு மரக் குச்சியைப் பயன்படுத்தி ஈரமான துணியை ஒரு முனையில் கட்டி, படுக்கைக்கு அடியில் நகர்த்தி சுத்தம் செய்யலாம்.
Image Credit: Freepik
படுக்கைப் பெட்டியில் தூசி மற்றும் அழுக்கு படிந்த இடத்தில் சுத்தம் செய்ய நினைத்தால். உங்கள் படுக்கையின் பகுதிகளை அகற்றும் போது, படுக்கைப் பெட்டியையும் சுத்தம் செய்வதை உறுதிசெய்யலாம். பெட்டியில் சேமித்த பொருளை சூரிய ஒலியில் வைத்து கிருமிகளை அகற்றவும், தூசியை அகற்ற ஒரு வெற்றிட கிளீனரை பயன்படுத்தவும் மற்றும் கறைகளை அகற்ற ஈரமான துணியை பயன்படுத்தவும்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் படுக்கையில் உருவாகும் மூட்டைப் பூச்சிகளை விரட்டியடிக்க எளிய வழிகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com