தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபம் இந்துக்களின் அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருவிழா சிவபெருமானை நினைத்து விளக்குகள் ஏற்றி வழிபாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாட்களில் வீடுகள் விளக்குகளால் பிரகாசிக்கும், தெருக்கள் மற்றும் கோவில்களை நேர்மறை மற்றும் ஆன்மீகத்தின் அழகிய காட்சியை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தில் உங்கள் வீடுகளை அலங்கரிக்க எங்களிடம் அருமையான யோசனைகள் இருக்கின்றது.
கார்த்திகை தீபத்தை கொண்டாடும் முதல் படி வீடுகளை முழுமையாகச் சுத்தம் செய்வதாகும். துப்புரவு என்பது எதிர்மறையை சுத்தப்படுத்துவதற்கும் நேர்மறை ஆற்றலுக்கான இடத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்க செய்கிறது. சுத்தம் செய்த பிறகு வீட்டை புதிய மலர்கள், மற்றும் பாரம்பரிய கோலங்களால் அலங்கரிக்கச் செய்யவும். இந்த அலங்காரங்கள் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற உதவுகிறது.
Image Credit: Freepik
வீட்டு வாசல் மற்றும் பூஜை நுழைவாயிலில் மா இலைகள், புதிய பூக்கள் மற்றும் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கவும். புதிய பூக்கள், தோரணம் மற்றும் மா இலைகள் வீடுகளில் இனிமையான நறுமணத்தை ஊடுருவி ஒரு பண்டிகை மனநிலையை உருவாக்கும். வீட்டு வாசலில் உங்களுக்கு மணம் கவர்ந்த கோலத்தை உருவாக்கிச் சுற்றி தீபங்கள் வைத்து அலங்கரிக்க செய்யவும்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் படுக்கையில் உருவாகும் மூட்டைப் பூச்சிகளை விரட்டியடிக்க எளிய வழிகள்
நுழைவாயில் செய்யும் தெய்வீக அலங்காரம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சரியான மனநிலையை உருவாக்குகிறது. இந்த கார்த்திகை தீபத்திற்கு வாசலில் கோலம் அல்லது மலர் ரங்கோலி இட்டு, எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்க செய்வார்கள். கோலத்தின் அருகே வாஸ்து பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி மலர்களை கொண்டு அலங்கரிக்க செய்யலாம், முடிந்தால் தண்ணீரில் மிதக்கும் விளக்குள் வைத்து அழகுபடுத்தலாம். வாசலில் பூக்களால் உருபாக்கப்பட்டு மாலைகளைத் தொங்க விடலாம்.
Image Credit: Freepik
மேலும் அழகை கூட்ட வீடுகளில் ஜன்னல், தூண்கள் போன்ற சில பகுதிகளில் புதிய மலர் மாலைகளால் அலங்கரிக்கவும். எளிமையாக முடிக்க விரும்பினால் இதற்கு வால்பேப்பரையும் சேர்க்கலாம். அலமாரி, மாடிப்படிகள், பால்கனி, சமையல் அறைகளில் விளக்குகள் ஏற்றி அழகுபடுத்தலாம்.
மேலும் படிக்க: சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களில் பிடித்திருக்கும் கிரீஸ் கறையை அகற்ற எளிய வழிகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com