Fridge Cleaning Tips : ஃபிரிட்ஜை முறையாக சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்

ஃபிரிட்ஜின் ஆயுட்காலத்தை நீட்டிக்க அதை முறையாக பராமரிப்பது அவசியம். இதற்காக ஃபிரிட்ஜை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆழமாக சுத்தப்படுத்த வேண்டும்.

how to clean a refrigerator

வழக்கமாக நாம் ஃபிரிட்ஜை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்துவிடுவோம். எனினும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஃபிரிட்ஜை ஆழமாகச் சுத்தம் செய்வது நல்லது. ஃபிரிட்ஜை இப்படி பராமரிப்பதன் மூலம் அதன் ஆயுளையும் அதிகரிக்கலாம். மேலும் உணவு மாசுபடுவதை தவிர்க்கலாம். நீங்கள் வீட்டில் ஃபிரிட்ஜை சுத்தப்படுத்தி ஆறு மாதத்திற்கு மேல் ஆகி இருந்தால் படிப்படியாக எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் ஃபிரிட்ஜில் வைக்கும் பழங்கள், காய்கறிகள் உட்பட எந்த உணவு பொருளாக இருந்தாலும் பிரெஷ் ஆக இருக்க வேண்டும் என்றால் ஃபிரிட்ஜ் சுகாதாரமாக இருப்பது அவசியம். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆழமாகச் சுத்தம் செய்வது நல்லது. ஃபிரிட்ஜை சுத்தப்படுத்தும் முன்பாக அதன் மீது ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர் அனைத்தையும் எடுத்துவிடுங்கள்.

Fridge Cleaning Tips

நீங்கள் ஃபிரிட்ஜை சுத்தப்படுத்த முடிவு செய்துவிட்டால் அந்த வாரத்தில் ஃபிரிட்ஜிற்குள் அதிக பொருட்கள் வைப்பதை தவிர்க்கவும். அப்போது தான் ஏற்கெனவே இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

ஃபிரிட்ஜை சுத்தப்படுத்த தேவையான பொருட்கள் டூத் பிரஷ், ஸ்பிரே பாட்டில், ஸ்க்ரப்பர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம், துணி மற்றும் டிஷ்யூ பேப்பர்.

ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் மற்றும் வினகர் சரிசமமாகச் சேர்க்கவும். வினிகர் இயற்கை கிருமிநாசினி மற்றும் துர்நாற்றத்தை போக்க கூடியது.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் சேர்க்கவும். பேக்கிங் சோடா ஸ்க்ரப்பிங் செய்யும் போது உதவும். பாத்திரம் கழுவும் திரவம் அழுக்குகளை நீக்கிவிடும்.

ஃபிரிட்ஜை சுத்தப்படுத்தும் முன்பாக சுவிட்சை ஆஃப் செய்து விடுங்கள். அடுக்குகள் அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு ஃப்ரீசரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை வைக்கலாம்.

இப்போது தண்ணீர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் கலவையில் துணியைத் போட்டு அதை பிழிந்து ஃபிரிட்ஜின் அடுக்குகளை ஒவ்வொன்றாகச் சுத்தப்படுத்தவும்.

ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும் போது Vent-ற்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கு ஸ்க்ரப்பர் பயன்படுத்தி துடைத்தால் போதுமானது.

அடுக்குகளை தண்ணீரில் கழுவிய பிறகு உலர் செய்துவிட்டு ஃபிரிட்ஜில் மாட்டவும்.

இதனிடையே காலாவதியான பொருட்களை குப்பையில் வீசி விடுங்கள்.

கறை அதிகமாக இருந்தால் வினிகர் தண்ணீர் கலவையை பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்.

இறுதியாக ஃபிரீசரை சுத்தம் செய்யவும். ஃபிரிட்ஜிற்கு அடியே இருக்கும் அசுத்தத்தை நீக்க தூசுறிஞ்சியை பயன்படுத்தவும்.

அவ்வளவு தான். தற்போது பொருட்களை உள்ளே எடுத்து வைத்துவிடுங்கள்.

ஃபிரிட்ஜின் ஓரங்களில் துர்நாற்றம் வீசாமல் இருக்க எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி வைக்கலாம் அல்லது பேக்கிங் சோடா ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு உள்ளே வைக்கலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP