திருமண வீடுகளில் முகூர்த்தக்கால் நடுதல் என்பதற்கான முழு விவரம் பற்றி தெரியுமா?

திருமண வீடுகளில் முகூர்த்தக்கால் நடுதல் அல்லது பந்தக்கால் நடுதல் என்பது பாரம்பரிய நிகழ்வுகளில் முக்கியமாக சடங்காக இருந்து வருகிறது. குறிப்பாக திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இதன் மகத்துவத்தைப் பற்றி பார்க்கலாம். 
image

திருமண பந்தக்கால் என்பது சுபகாரியத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. திருமண வீடுகளில், திருமணம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சுபகூர்த்த நாளில், சுபமுகூர்த்தம் நேரத்தில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது அல்லது இதற்காக அல்ல நேரம் குறித்தி இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். இதற்கான முக்கிய காரணம், நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இல்லங்களிலும், திருமணம் செய்யும் இடத்திலும் வடகிழக்கு திசையில் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன் மற்றும் மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து, சில சடங்குகள் செய்து வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும், பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்று இந்த சடங்கின் முலம் நம்பப்படுகிறது.

Pandakkal

முகூர்த்தக்கால் நடும் சடங்கின் முறை

வீட்டுத் திருமணத்தின் போது வடகிழக்கு திசையான ஈசான்ய மூலையில், வீட்டு வாசலில் முகூர்த்தக்கால் நடப்படும். முகூர்த்தக்கால் நடுவதற்கு மூங்கிலை புதிய தண்ணீர் மூலம் சுத்தம் செய்து மூங்கில் முழுவதும் மஞ்சள் புசி, குங்குமம் வைத்து, அதன் உச்சியில் பூக்கள், மா இலைகள் கட்டி அலங்கரித்து வீட்டின் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது. நடுவதற்கு முன் மூங்கில் சரியாக நிற்க குழிதோண்டுவார்கள். அந்த பல்லத்தில் பல், நவதானியம், தயிர் மற்றும் ஒற்றை படையில் காசு போட்டு, முகூர்த்தக்கால் நடுவார்கள். முகூர்த்தக்கால் நட்ட பிறகு தூபம் காட்டி, தேங்காய் உடைத்து வழிப்படுவார்கள்.

Pandakkal  2

முகூர்த்தக்கால் நடுவதன் முக்கியத்துவம்

திருமணம் சிறப்பாக நடைபெற பிரபஞ்சத்தின் உதவி வேண்டும் என்பதற்காக பஞ்ச பூதங்களுக்கு மரியாதை செய்யவும் விதமாக இந்த விழா நடைபெறுவதாக நம்பப்படுகிறது. காரணம் எதுவாயினும் விழாக்களில் கூடும் உறவுகளின் உற்சாகம் சிறப்பு. இந்த விழாவில் முக்கிய உறவுகள் அனைத்து ஒன்று சேர்ந்து நடத்தப்படும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

மேலும் படிக்க: திருமணத்தன்று சுப முகூர்த்தத்தில் பெண்கள் கூரை பட்டு அணிந்து தாலி ஏற்றுக்கொள்வது ஏன் தெரியுமா?

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP