கருவளையங்களுக்கு குட்பை சொல்லுங்க; காபி கண் மாஸ்க் ட்ரை பண்ணி பாருங்க

இந்த காலத்து இளைஞர்கள் இரவில் சரியாக தூங்குவதே இல்லை. இதனால் கூட கருவளையம் ஏற்படும். 
image

முகத்தின் அழகை குறைக்கும் கருவளையங்கள் (டார்க் சர்கிள்ஸ்) பலருக்கும் பெரும் தொல்லையாக உள்ளது. தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த சோகை, அதிக நேரம் மொபைல் ஸ்கிரீன் பார்ப்பது, டிவி பார்ப்பது, அதிக நேரம் லேப்டாப்பில் வேலை செய்வது போன்றவை கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட முக்கிய காரணங்கள். அதே போல மரபணு மாற்றங்கள், மோசமான வாழ்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் இதற்கு காரணம். முன்பெல்லாம் 40+ வயதினருக்கு மட்டுமே இருந்த இந்த பிரச்சனை, இன்று இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் உள்ளது. இந்த காலத்து இளைஞர்கள் இரவில் சரியாக தூங்குவதே இல்லை. இதனால் கூட கருவளையம் ஏற்படும். ஆனால் கவலைப்பட வேண்டாம். இந்த கருவளையங்களை தடையமே இல்லாமல் நீக்க உதவும் ஒரு இயற்கை வைத்தியம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கருவளையம் குறைய எளிய வீட்டு மருத்துவம்:


ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான பராமரிப்பு மூலம் கருவளையத்தை குறைக்கலாம். அந்த வரிசையில் ஆமணக்கு எண்ணெய் காபி மாஸ்க் ஒரு சிறந்த தீர்வு. இதை 3 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் கருவளையம் மேஜிக் போல மறைந்துவிடும்.

eye mask

ஆமணக்கு எண்ணெய் காபி மாஸ்க்:

  • ஸ்டெப் 1: ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தண்ணீர் + ½ ஸ்பூன் காபி தூள் கலக்கவும்.
  • ஸ்டெப் 2: அதே கிண்ணத்தில் ½ ஸ்பூன் கற்றாழை ஜெல் + 2 அல்லது 3 சொட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • ஸ்டெப் 3: கருவளையம் உள்ள பகுதியில் இதை பூசி, 30 நிமிடம் விட்டுவிட்டு கழுவவும்.
  • ஸ்டெப் 4: 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து இரவில் தூங்குவதற்கு முன் இதை செய்தால் கருவளையம் குறையும்.

காபி கண் மாஸ்க்கின் நன்மைகள்:

  • ஆமணக்கு எண்ணெய்: ஈரப்பதத்தை தரும், கண்களுக்கு கீழ் வீக்கத்தை குறைக்கும்.
  • காபி: இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கருவளையத்தை குறைக்கும்.
  • கற்றாழை ஜெல்: சருமத்தை மிருதுவாக்கி, நுண்கோடுகளை குறைக்கும்.

மேலும் படிக்க: முகத்திற்கு சோப்பு வேண்டாம்! இந்த பச்சை பயிறு பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்; செய்வது எப்படி?

குறிப்பு:


உங்களுக்கு கண்களில் எரிச்சல் இருந்தால் இந்த மாஸ்க் பயன்படுத்த வேண்டாம். அதே போல முதல் முறையாக பயன்படுத்தும் முன், சிறிதளவு சருமத்தில் பூசி பாட்ச் டெஸ்ட் செய்து பரிசோதிக்க வேண்டும்.

கருவளையம் வராமல் தடுக்க இயற்கை வழிகள்:

  • தினமும் காலையில் ஐஸ் கட்டி எடுத்து கண்களில் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் குறையும்.
  • போதுமான தூக்கம் வேண்டும். இரவு 7 முதல் 8 மணி நேரம் உறங்கவும்.
  • உணவில் கட்டுப்பாடு முக்கியம். சர்க்கரை & உப்பு உட்கொள்ளலை குறைக்கவும்.
  • கண்களுக்கு பாதாம் எண்ணெய் மசாஜ், வைட்டமின் E நிறைந்த இது கருவளையத்தை விரைவாக குறைக்கும்.
  • இது போன்ற இயற்கை முறைகளை பின்பற்றினால், கருவளையங்களை ஈசியாக சரிசெய்யலாம்.

Image source: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP