herzindagi
knee pain reasons

Knee Pain : பெண்கள் மூட்டு வலியை அலட்சிய படுத்த கூடாது

பெண்கள் தங்கள் மூட்டு வலிக்கு எப்போதும் முக்கியத்துவம் தர மாட்டார்கள். இந்த வலி ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
Editorial
Updated:- 2023-02-28, 10:27 IST

ஒரு பெண் தன் மொத்த குடும்பத்தையும் எப்படி கண்காணிப்புடன் பார்த்து கொள்கிறாரோ, அதே போல் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் குடும்ப தலைவியின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனமாக அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். இப்போது ஆரோக்கியம் என்று எடுத்துக் கொண்டால், பெண்களுக்கு முதல் நோயாக உருவெடுப்பது மூட்டு வலி தான். இதில் கொடுமை என்னவென்றால், அவர்களின் மூட்டு வலி அல்லது எலும்பு பிரச்சனைகளை சரி செய்ய அவர்கள் தாங்களாகவே வெவ்வேறு வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்ய முயற்சிப்பார்கள். இதனால் மூட்டு வலி அதிகரிக்க ஆரம்பித்து, இறுதியில் அது அறுவை சிகிச்சை தவிர வேறு மாற்று வழியே இல்லாத நிலைக்கு கொண்டு சேர்க்கும்.

ஆர்த்தரிடிஸ் வியாதியை எப்படி கண்டுபிடிப்பது?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் மூட்டுக்கள் என்பது இரண்டு எலும்புகளால் பிணைக்கப்பட்டது. இந்த இரண்டு எலும்புகளுக்கும் இடையில் குறுத்தெலும்பு இருக்கிறது. இந்த குறுத்தெலும்பு தான் மென்மையான செயல்பாடுகளை மூட்டுகளுக்கு தருகிறது. இதனால் மூட்டு நன்கு வளைந்து கொடு‌க்கு‌ம், நாள் முழுவதும் நம்மால் எளிமையாக வேலை செய்ய முடிகிறது. பல நேரங்களில் விபத்து காரணமாகவோ, அடி பட்டு இருந்தாலோ, உடற்பயிற்சி இல்லாத காரணம், நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பது, உடல்நலக்குறைவு, சரியான உணவு இல்லாமல் இருப்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் குறுத்தெலும்பு தேய்மானம் கொடுக்க தொடங்கி விடும். சிலருக்கு இந்த பிரச்சினைகளால் இளம் வயதிலேயே தேய்மானம் ஆகும். சிலருக்கு வயது ஏற ஏற எலும்பு தேய்மானம் உண்டாகும். நம் வாழ்க்கை முறையை சரியான நேரத்தில் மாற்றி கொள்ளா விட்டால், இந்த குறுத்தெலும்பு பழுதடையும். இதனால் மூட்டுகளில் ஒரு விரைப்பு தன்மை, வீக்கம் மற்றும் அதீத வலி ஏற்படும். இந்த பிரச்சினையால் அவதிப்படும் நோயாளிகள் சில சமயம் படுக்கையில் இருந்து எழ முடியாத சூழலும் ஏற்படும்.

இதுவும் உதவலாம் :கழுத்து வலியை விரட்டும் யோகாசனங்கள்

வாழ்க்கை முறை மாற்றம் அவசியம் வேண்டும்.

குறுத்தெலும்பு ஒரு முறை பழுதடைந்தால் அதை மறுபடியும் அதே நிலைக்கு கொண்டு வர முடியாது. எனவே நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், நம்மால் அது பழுதடைவதை தாமதமாக்க முடியும். பல ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்று இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மிகவும் முக்கியமான விஷயம், பெண்கள் காலணிகளை பெரிய ஹீல்ஸ் வைத்து தொடர்ந்து போடுவது தவறு. மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

knee pain in womens

ஆர்த்தரிடிஸ் எத்தனை வகைகள் கொண்டது?

ஆஸ்டியோ ஆர்த்தரிடிஸ் :

குறுத்தெலும்பு பழுதடையும். இது பொதுவாக 55 வயதை கடந்தவர்களுக்கு தான் வரும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

ருமடாயிட் ஆர்த்தரிடிஸ் :

இதை தன் நோய் எதிர்ப்பு வியாதி என்று கூறலாம். இதில் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி உடலுக்கு எதிராக செயல்படும். இரத்த பரிசோதனை யில் இல்லை என்று வந்தாலும், இது 35 - 55 வயதில் உண்டாகும்.

சொரியாசிஸ் ஆர்த்தரிடிஸ் :

இது மூட்டுக்களில் அபாயத்தை ஏற்படுத்தும்

இதற்கு எப்படி சிகிச்சை செய்ய வேண்டும்?

மருத்துவர்கள் இதற்காக மேற்கொள்வது பொதுவான இரத்த பரிசோதனை, எக்ஸ் ரே, யூரிக் அமில பரிசோதனை ஆகும். இதன் மூலம் ஆர்த்தரிடிஸ் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கான சிகிச்சையை சரியான நேரத்தில் மேற்கொண்டால், சிகிச்சைக்கு அதிக நேரம் எடுக்காது. நோயாளிக்கு விரைவில் உடல் நலம் தேறிவிடும். கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர் விபோர் சிங்கால் கூறுகையில், 'குறிப்பாக பெண்கள் தங்கள் மூட்டு வலிக்கு கடைசி நேரத்தில் தான் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் மூட்டினை சரி செய்ய மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த டி கே ஆர் எனப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சில புதிய யுக்திகள் இருக்கின்றன. இந்த சிகிச்சை கணினியின் உதவியால் மொத்த மூட்டையும் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் சில சமயம் அறுவை சிகிச்சையில் தவறுகள் ஏற்படலாம். அதே நேரத்தில் இந்த புதிய யுக்தி, பொறுத்தப்பட்ட செயற்கை மூட்டை இயற்கை மூட்டு போலவே நன்றாக செயல் பட வைக்கும். டி கே ஆர் யுக்தியை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்ய ஒரு மணி நேரம் கூட ஆகாது. நோயாளி யும் 24 மணி நேரத்திற்குள் எழுந்து நடக்க முயற்சி செய்யலாம்.

இதுவும் உதவலாம் :யூரிக் அமிலத்தின் அளவுகளை பாதிக்கும் உணவுகள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com