உங்கள் மூட்டுகளில் அடிக்கடி வலி ஏற்படுகிறதா? சில சமயங்களில் எந்த நேரத்திலும் இது போன்ற வலியை உணரலாம். உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, மூட்டுகளில் சிறிய படிகங்கள் உருவாக தொடங்குகின்றன. இது கீல்வாதம் போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் பியூரின்கள் அதிகம் உள்ள சில உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒரு சில காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளில் பியூரின் எனும் சேர்மம் அதிகமாக இருக்கும். இவ்வகை உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கின்றன. இவற்றை குறைவாக சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்திடலாம்.
யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். உடல் பியூரின் எனும் சேர்மத்தை உடைக்கும்போது இந்த அமிலம் உருவாகிறது. இதில் பெரும்பாலானவை சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் அதிக பியூரின் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கின்றன.
உணவுகளின் பியூரின் அளவுகளை பொறுத்து, அவை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். மேலும் பிரக்டோஸ் உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கக்கூடும்.
உடலில் அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் பின்வரும் உணவுகளை தவிர்க்கவேண்டும்.
மீன்கள் ஆரோக்கியமான உணவு தான். இருப்பினும் ஒரு சில கடல் உணவுகளில் பியூரின் அளவுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக இறால், சூறை மற்றும் மட்டி போன்ற கடல் உணவுகளில் பியூரின் அதிகமாக காணப்படுகிறது. இவை உங்கள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கும் என்பதால் இவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது.
அதிக பியூரின் உள்ள காய்கறிகளில் காலிஃபிளவர், கீரை மற்றும் காளான்களும் அடங்கும். இருப்பினும், இவை மற்ற உணவுகளைப் போல யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்காது. எனவே இந்த காய்கறிகளை நீங்கள் மிதமாக உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் உலர் திராட்சை நீர்
சிவப்பு இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான ஈரல், சிறுநீரகம் மற்றும் சுவரொட்டி போன்ற இறைச்சிகளைத் தவிர்க்கவும். இவை மிக அதிக அளவு பியூரின்களைக் கொண்டுள்ளன. இவை இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கலாம். எனவே இது போன்ற இறைச்சிகளை தவிர்த்திடுஙகள்.
தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் பீர், ஓட்கா அல்லது விஸ்கி போன்ற மதுபானங்களும் கீல்வாதத்தைத் தூண்டுலாம். யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் மதுவிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் யூரிக் அமில அளவை அதிகரிக்கக்கூடிய பியூரின்களின் மதுவில் அதிகமாக உள்ளன.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க விரும்புபவர்கள் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com