இந்த 6 வகையான கோடைகால பானங்கள் கலோரிகளில் குறைவாகவும் ஆரோக்கியத்தில் பலமாகவும், சுவையில் ருசியாகவும் இருக்கும். இவை உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து படைத்துக்கொண்டே உங்கள் எடை குறைப்பு பயணத்தையும் எளிதாக்க உதவும்.
வாழ்க்கைமுறை பயிற்சியாளரான ஸ்னேஹல் அல்சுலே இத்தகைய பானங்களைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கோடைகால ஆரோக்கியமான பானங்கள் குறைவான கலோரிகள் கொண்டவை, ஆரோக்கியமானவை, சுவையானவை மற்றும் பகுக்கப்பட்ட அல்லது கார்பன் ஏற்றப்பட்ட பானங்களை விட சிறந்தவை என்று அவர் தனது பதிவின் மூலம் விளக்குகிறார். மேலும், நீங்கள் இந்த பானங்களை சரியான உணவுடன் சேர்த்து உண்ணும் போது, அது உடல் எடையை குறைக்க உதவும். இந்த பானங்களின் நன்மைகள் பற்றியும் மற்றும் அவற்றை உணவில் எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றியும் நிபுணர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதுவும் உதவலாம்:உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அற்புத பானம்
தேங்காய் நீரில் பொட்டாசியம் மற்றும் உயர்ந்த பயோஆக்டிவ் நொதிகள் உள்ளன, இது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது. தசைகள் அதிக கலோரிகளை அழிக்க உதவுகிறது. எனவே, தினமும் அடிக்கடி தேங்காய்த் தண்ணீரைக் குடிப்பது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
கடுமையான உடற்பயிற்சிக்கு பின் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க தேவையான தாதுக்கள் இதில் உள்ளன. இந்த தாதுக்களில் கால்சியம், செம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, ஜிங்க், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கும். எனவே, கரும்பு சாறு செயற்கை சத்து பானங்கள் மற்றும் உடற்பயிற்சி பின் ஆற்றலை தரும் பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். கரும்பு சாறு ஒரு சிறந்த எடை குறைப்பு பானமாக இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது, ஆனால் இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை உறுதியாக கூற முடியும். இது உங்களை நீண்ட நேரம் வரை வயிறு நிரம்பி இருப்பதாக உணர வைக்கிறது, இதன் மூலம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைப்பதில் புதினா இலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதினா இலைகள் செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. புதினா டீ எடை குறைப்பை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் கலோரி இல்லாத பானமாகும்.
மோர் புரதம், வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்கள் நிறைந்தது. ஆனால் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. மோர் குடிப்பது நம்மை நீர்ச்சத்துடனும், உடல் சக்தியுடனும் வைத்திருக்கும். இது நம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கிறது, இதனால் தேவையில்லாமல் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைக் குறைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற பானம் இது.
இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் சாறு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சாப்பிடுவதற்கு தர்பூசணி சிறந்த பழங்களில் ஒன்றாகும், ஏனென்றால் தர்பூசணியின் எடையில் 90% தண்ணீர் தான் இருக்கிறது. 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது அர்ஜினைன் எனப்படும் அமினோ அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com