உடல் எடை அதிகரிப்பதால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உடல் எடையை குறைக்க நீங்கள் அனைத்து விஷயங்களையும் முயற்சித்தீர்களா, ஆனால் எடை குறைப்பு ஒரு பேருக்கு கூட நடக்கவில்லையா? எடை குறைவாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது? குறிப்பாக பெண்கள் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது மட்டுமின்றி, பல சமயங்களில் பெண்களும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள், ஆனால் அதனால் எடை குறைப்புக்கு எந்த நன்மையும் ஏற்படுவது இல்லை.
செலிபிரிட்டி இன்டர்நேஷனல் டயட்டீஷியனும், ஃபேட் டு ஸ்லிம் குரூப்பின் ஊட்டச்சத்து நிபுணருமான ஷிகா எ சர்மா கூறுவது என்னவென்றால், இஇந்த பானத்தை குடிப்பதன் மூலம் உங்கள் வளர்ந்து வரும் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் முடியும் என்று கூறுகிறார். இந்த தனிச்சிறந்த பானம் கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும், ஏனென்றால் இதில் கொத்தமல்லி தூள் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி தூளுடன் இலவங்கப்பட்டை கலந்து தயாரிக்கப்படும் இந்த பானம் உடல் எடையை மிக வேகமாக குறைக்கிறது. அதன் பயன்கள் மற்றும் செய்யும் முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் சாறு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?
சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் கொத்தமல்லி தூள் ஒன்றாகும். இதன் பயன்பாடு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. கொத்தமல்லி தூளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இதுமட்டுமின்றி, உங்கள் வழக்கமான உணவில் இதை குறைந்தபட்சம் 2 ஸ்பூன் சேர்த்துக் கொண்டால், உடல் எடை மிக வேகமாக குறைகிறது.
இலவங்கப்பட்டை டீ என்பது ஒருபுறம் குளிர் காலத்தில் நன்மை பயக்கும் பானம் என்றால் மறுபுறம் அதன் தூள் உடலின் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், உடலின் PCODயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது என்று ஷிகா விளக்குகிறார். .
இந்த இரண்டு பொருட்களையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் ஒரு பானம் தான் இது. இந்த பானம் கோடையில் மிக விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த பானத்தைப் பயன்படுத்தி, ஒரு மாதத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்.
இதுவும் உதவலாம் :பெண்கள் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் தெரியுமா?
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com