நெல்லிக்காய் இந்தியாவில் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாகும், மேலும் அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இது வைட்டமின் Cயின் முக்கிய மூல ஆதாரங்களில் ஒன்றாகும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வைட்டமின் C தவிர, நெல்லிக்காயில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நம் உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச்சத்துக்கள் ஆகும். நெல்லி உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது. இது உங்கள் சருமத்தை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட வைக்கிறது மற்றும் முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மேலும் அது உங்கள் உடல் எடையையும் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நெல்லிக்காய் சாறு கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைப்புக்கு நீங்கள் ஏன் நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
உங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் அனைத்து நச்சுகளையும் அகற்றி, செரிமானத்தை மேம்படுத்த நெல்லி சாறு உதவுகிறது. உங்கள் வயிற்றில் செரிமானம் நன்றாக நடந்தால் தான், உங்கள் உடல் சிறப்பாக செயல்பட முடியும். நெல்லிக்காய் சாறு உண்ணும் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. செரிமானத்தன்மை மேம்படும் போது உங்கள் உடல் சரியான கொழுப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் உடலில் இருந்து அனைத்து கழிவுகளும் சுத்தமாக வெளியேற உதவுகிறது.
இதுவும் உதவலாம் :பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்
உடலில் அதிக கலோரிகளை கரைக்கவும் மற்றும் அதிக எடையை குறைக்கவும் உங்கள் உடலுக்கு சிறந்த வளர்சிதை மாற்ற விகிதம் தேவைப்படுகிறது. நெல்லிக்காய் சாறு குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மெதுவான வளர்சிதை மாற்ற விகிதம் தான் பொதுவாக எடை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது உடலில் உள்ள அனைத்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் வெளியேற்ற உதவும். இந்த தீங்கு விளைவிக்கும் நச்சுகள் தான் செரிமான மண்டலத்தில் பிரச்சனைகளை உருவாக்கி, உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறது. நெல்லிக்காய் சாறு உடலில் நச்சுகள் சேர விடாமல் தடுக்கும் என்பதால் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.
நெல்லிக்காய் சாறில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நெல்லிக்காய் சாறு குடிப்பதால், இந்த நார்ச்சத்துக்கள் ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் நீங்கள் ஆரோக்கியமற்ற மற்றும் தேவைக்கு அதிகமாக சாப்பிட விரும்ப மாட்டீர்கள். தேவையில்லாமல் அடிக்கடி பசி எடுக்காது. இதனால் நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்வீர்கள் மற்றும் விரைவாக எடை இழப்பீர்கள்.
இதுவும் உதவலாம் :பெண்கள் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் தெரியுமா?
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் போது உங்களுக்கு நிறைய சக்தி தேவைப்படும். உங்கள் சக்தியின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும் போது நெல்லிக்காய் சாறு உங்கள் உடலுக்கு சிறந்த பானமாகும். நெல்லி உங்கள் சக்தியின் அளவை உயர்வாக வைத்திருக்கிறது, உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடனும் நீர் சத்துடனும் இருக்க வைக்கிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com