ஆரோக்கியத்திற்கு எந்த சமையல் எண்ணெய் சிறந்தது தெரியுமா?

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கேள்வி பலமுறை நம் மனதில் தோன்றியிருக்கும். இதற்கான விடையை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்…

 
Shobana Vigneshwar
cooking oil health tip

பெரும்பாலானவர்கள் ரீஃபைண்ட் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். மேலும் ஒரு சில விசேஷ நாட்களில் நெய்யும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எண்ணெயின் விலை குறைவானதா அல்லது மலிவானதா என்று விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த எண்ணெய் சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

இதை தவிர நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணெயை ஒரு முறை சூடு படுத்திய பிறகு, அதை மீண்டும் பயன்படுத்துவது சரிதானா என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் எல்லா சமையல் எண்ணெய்களுக்கும் ஒரு ஸ்மோக் பாயிண்ட் இருக்கும். ஒரு எண்ணெயை அதன் ஸ்மோக் பாயிண்டிற்கு மேலான வெப்ப நிலையில் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

இதனுடன் நம் உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்தும் எண்ணெயில் உள்ளது. ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்பு அத்தியாவசியமானது. இந்நிலையில் சமையல் எண்ணெயில் நல்ல கொழுப்பு இருக்கிறதா அல்லது கெட்ட கொழுப்பு இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது எப்படி கண்டறிவது என்று யோசிக்கிறீர்களா? இதற்கான விடையை எழுத்தாளர் மற்றும் விருது பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் விஷாகா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

டாக்டர் விசாகா அவர்கள் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகளை கொண்ட சமையல் எண்ணெய்களுக்கு இடையேயான வித்தியாசத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள தகவல்களின் அடிப்படையில் சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

நல்ல கொழுப்புகள் என்றால் என்ன?

நல்ல நிறைவுறா கொழுப்புகள் நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. உதாரணமாக தாவர எண்ணெய்கள், நட்ஸ், விதைகள் மற்றும் மீன் போன்ற உணவுகளில் நல்ல கொழுப்புகள் உள்ளன.

கெட்ட கொழுப்புகள் என்றால் என்ன?

டிரான்ஸ் அல்லது கெட்ட கொழுப்புகளை மிதமாக உட்கொள்ளும் போது கூட, அவை நோய்வாய்ப்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் கெட்ட கொழுப்புகளால் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கலாம். இது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி இருதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

நல்ல கொழுப்பு கொண்ட சமையல் எண்ணெய்கள்

best oil for cooking

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சரியான சமையல் எண்ணெயை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இதற்கு நல்ல கொழுப்புகளை கொண்ட சமையல் எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

  • ஆலிவ் எண்ணெய்
  • தேங்காய் எண்ணெய்
  • கடுகு எண்ணெய்
  • நல்லெண்ணெய்
  • கடலை எண்ணெய்
  • அவகேடோ எண்ணெய்
  • நெய்

கெட்ட கொழுப்பு எண்ணெய்கள்

நாம் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தி வரும் ஒரு சில எண்ணெய்களிலும் கெட்ட கொழுப்புகள் உள்ளன. நிபுணரின் ஆலோசனைப்படி கெட்ட கொழுப்புகள் உள்ள எண்ணெய்களை தவிர்ப்பது நல்லது.

  • அரிசி தவிடு எண்ணெய்
  • சூரியகாந்தி எண்ணெய்
  • குங்குமப்பூ எண்ணெய்
  • கடுகு எண்ணெய்
  • சோயாபீன் எண்ணெய்
  • பாமாயில்
  • மார்கரின் எண்ணெய்

இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் நீர்க்கட்டி பிரச்சனைக்கு பல அதிசயங்களை செய்யும் தண்ணீர் விட்டான் கிழங்கு

இந்த எண்ணெய்களை எப்படி பயன்படுத்துவது?

olive oil for cooking

  • சாலட் போன்ற உணவுகளில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயில் சமைக்க குறைந்த வெப்பநிலை மட்டுமே தேவைப்படும்.
  • கடலை எண்ணெய் சமையலுக்கு சிறந்தது. அதன் நறுமணம் உணவுக்கு நல்ல சுவையையும் சேர்க்கிறது. பச்சை காய்கறிகளை சமைக்க இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
  • தேங்காய் எண்ணெயின் மணம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், நல்ல கொழுப்புகள் உள்ள தேங்காய் எண்ணெயையும் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
  • நல்ல கொழுப்புகள் உள்ள எண்ணெயாக இருந்தாலும் அவற்றை ஒருமுறை சூடாக்கிய பிறகு மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

நீங்கள் எந்த எண்ணெயைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம். இருப்பினும் உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை ஒரு முறை ஆலோசனை செய்யவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer