Dates Milk : பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

பேரிச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், இருமல், தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பேரிச்சம் பழம் பாலின் நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…

 
Shobana Vigneshwar
benefits of dates and milk for health

இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளவர்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகளுக்கு பதிலாக ஆரோக்கியமான பேரிச்சம் பழங்களை சாப்பிடலாம். அதிலும் பேரிச்சம் பழங்களை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் நன்மைகளை பெற முடியும். இரவு தூக்கமின்மையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த பேரிச்சம் பழம் பால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் தரும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது விரிவாக பார்க்கலாம்.

மலச்சிக்கல்

2 பேரிச்சம் பழங்களை 1 கிளாஸ் பாலில் வேகவைத்து ஆறவிடவும், இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கிராம்பு சாப்பிட்டால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?

இரத்த சோகை, நரம்பு நோய்கள்

சில பேரீச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும். இந்த பாலுடன் குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து குடிக்கலாம். இந்த கலவை இரத்த சோகை மற்றும் நரம்பு நோய்களுக்கு நல்லது.

இருமல்

dates milk for cough

2-3 பேரிச்சம் பழங்களை சூடான பாலில் ஊற வைக்கவும். சூடு தணிந்த பின் இதில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இந்த கலவை சளியை நீக்கி, நீடித்த இருமலையும் சரி செய்ய உதவுகிறது.

இதய படபடப்பு

அதிக இதயத்துடிப்பு அல்லது இதய பதபடப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பேரிச்சம் பழம் பால் கலவை நன்மை தரும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் இரண்டு பேரிச்சம் பழங்கள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

தூக்கமின்மை

dates milk for good sleep

இரவு அதிக நேரம் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்கள் என்றால், பேரீச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

உயர் இரத்த அழுத்தம்

காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் 50-70 கிராம் பேரீச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை பெண்கள் எவ்வாறு தடுக்கலாம்?

வாய்வு

dates milk for stomach health

2: 1 விகிதத்தில் சீரகம் மற்றும் நசுக்கிய பேரீச்சம் பழங்களை எடுத்துக்கொள்ளவும். இதனை ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிக்கலாம். இது அதிகப்படியான வாய்வு உருவாவதை குணப்படுத்த உதவும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்

பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer