herzindagi
image

உடல் எடையை செக் பண்ண சரியான நேரம் எது? மறந்தும்கூட இந்த விஷயங்களை செய்யாதீங்க

எப்போது எடையை செக் செய்ய வேண்டும், எப்படி சரிபார்க்க வேண்டும் மற்றும் எந்த தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
Editorial
Updated:- 2025-07-01, 22:02 IST

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர் ஆக இருந்தாலும் சரி அல்லது உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவராக இருந்தாலும் சரி உங்கள் எடையை எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது முக்கியம். உடல் எடையை சரிபார்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதி. ஒரு சிலர் வீட்டில் எடை பார்க்கும் மெஷின் வாங்கி வைத்து தோணும் போதெல்லாம் எடை செக் செய்வார்கள். எப்போதும் உணவு சாப்பிட பிறகு நீங்கள் எடை பார்த்தால் எடை அதிகமாக தான் காட்டும். அதே போல மீண்டும் மீண்டும் எடை செக் செய்தால் கூட வித்தியாசம் தெரியும். அந்த வரிசையில் எப்போது எடையை செக் செய்ய வேண்டும், எப்படி சரிபார்க்க வேண்டும் மற்றும் எந்த தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில் உடல் எடையை சரிபார்க்க சரியான நேரம் மற்றும் பொதுவான தவறுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

உடல் எடையை சரிபார்க்க சரியான நேரம் எது?


காலையில் தூங்கி எழுந்தவுடன்:


காலையில் எழுந்தவுடன், உணவு அல்லது தண்ணீர் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் எடையை சரிபார்க்கவும். இந்த நேரத்தில் உடல் எடை மிகவும் துல்லியமாக இருக்கும், ஏனெனில் இரவு முழுவதும் உடல் வளர்சிதை மாற்றத்தின் காரணமாக நீரிழப்பு இல்லாமல் இருக்கும்.

body weight

வாரம் ஒரு முறை ஒரே நேரத்தில்:


ஒவ்வொரு நாளும் எடையை சரிபார்க்காமல், வாரம் ஒரு முறை ஒரே நேரத்தில் (உதாரணமாக ஒவ்வொரு திங்கள் காலை) உங்கள் எடையை சரிபார்க்கவும். இது உங்கள் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக புரிந்துகொள்ள உதவும்.


உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின்:


உடற்பயிற்சிக்கு முன்பு அல்லது பின்பு உங்கள் எடையை சரிபார்க்கலாம், ஆனால் இரண்டிலும் ஒரே நேரத்தில் சரிபார்க்கவும். உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேறுவதால் எடை குறையலாம், ஆனால் இது நீரிழப்பு காரணமாக மட்டுமே இருக்கும்.

exercise

எடையை சரிபார்க்கும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்:


வெவ்வேறு நேரங்களில் எடையை பார்ப்பது:


ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் எடையை சரிபார்பது தவறான முடிவுகளைத் தரும். உதாரணமாக, மதியம் அல்லது இரவில் சரிபார்ப்பது, உணவு மற்றும் நீர் உட்கொள்ளலின் காரணமாக எடை அதிகமாகத் தோன்றலாம்.


ஆடைகள் எடை கணக்கிடுதல்:


எடையை சரிபார்க்கும் போது கூடுதல் ஆடைகள், காலணிகள் அல்லது மொபைல் போன்றவற்றை வைத்துக்கொண்டு சரிபார்க்க கூடாது. இவை உங்கள் எடையில் தவறான அளவீட்டை ஏற்படுத்தும்.

weight check

உணவு அல்லது நீர் குடித்த பின்பு சரிபார்த்தல்:


உணவு அல்லது தண்ணீர் குடித்த உடனேயே எடையை சரிபார்க்காதீர்கள். இது உண்மையான எடையை விட அதிகமாகக் காட்டலாம். குறைந்தது 2-3 மணி நேரம் கழித்து எடை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க: உடல் உஷ்ணம் அதிகரித்தால் என்ன பிரச்சனைகள் வரும்? உஷ்ணத்தை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்

மாதவிடாய் காலத்தில் எடை பார்க்கக்கூடாது:


பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடலில் நீர் தங்குதல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக எடை அதிகரித்து தோன்றலாம். எனவே இந்த காலகட்டத்தில் எடையை சரிபார்க்காமல் இருப்பது நல்லது.

periods

அதிகமாக செக் செய்வது:


ஒவ்வொரு நாளும் பல முறை எடையை சரிபார்ப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை மட்டும் உங்கள் உடல் எடையை சரிபார்ப்பது போதுமானது.


அந்த வரிசையில் உடல் எடையை சரிபார்க்க சரியான நேரம் மற்றும் முறைகளைப் பின்பற்றுவது முக்கியம். தவறான முறைகள் தவறான முடிவுகளைத் தரும், இது மன அழுத்தம் மற்றும் தவறான ஆரோக்கிய முடிவுகளுக்கு வழிவகுக்கும். எனவே மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி, உங்கள் எடையை சரியான முறையில் கண்காணிக்கவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com