herzindagi
image

3 கிலோ எடையைக் குறைக்க இரவு நேரத்தில் இந்த விஷயங்களை செய்யாதீங்க

உடல் எடை அதிகரித்து கொண்டே இருக்கிறது என கவலைப்படுறீங்களா ? இரவு நேரத்தில் சில விஷயங்களை தவிர்த்தால் 3 கிலோ உடல் எடையைக் நிச்சயம் குறைக்கலாம்.
Editorial
Updated:- 2025-07-12, 14:38 IST

உடல் எடையைக் குறைப்பது எளிதான காரியமல்ல. உடல் எடை ஏறுவது மிக எளிது. ஆனால் ஒரு கிலோ எடையைக் குறைப்பது கூட மிக மிக கடினமாக தெரியும். உடலில் கொழுப்பை எரித்து எடையை குறைப்பதற்கு உணவுமுறை மாற்றமும், உடற்பயிற்சியும் அவசியம். நம்முடைய இரவு நேர பழக்கங்கள் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. சில மாற்றங்களை செய்து 3 கிலோ உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ? சொல்வது எளிது செய்வது கடினம் என நினைக்கலாம். நம்பினால் முடியாதது எதுவுமில்லை. அதாவது நம்முடைய இரவுநேர பழக்கங்கள் கொழுப்பை சேகரிக்கும் ஹார்மோன்களின் செயல்பாட்டை தூண்டிவிடுகிறது. உடல் எடை அதிகரிப்புக்கு இதுவும் முக்கிய காரணமாகும். இப்பிரச்னையை சரி செய்து 3 கிலோ எடையைக் குறைக்க ஊட்டச்சத்து நிபுணர் கூறிய தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

night habits to reduce belly fat

3 கிலோ எடையைக் குறைப்பதற்கான வழிகள்

  • இரவில் தூங்க செல்லும் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அதே போல இரவு நேரத்தில் தின்பண்டம் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும். சாப்பிட்டவுடன் தூங்க செல்வதால் உணவு செரிமானம் ஆகி ஆற்றலாக மாற்றப்படாமல் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் பசித்தால் நட்ஸ் வகைகள் அல்லது டீ மட்டும் குடிக்கவும்.
  • இரவு நேரத்தில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க. அது முட்டை, நட்ஸ் வகைகள், பீன்ஸ், சிக்கன் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • இரவில் தூங்குவதற்கு முன்பாக பத்து நிமிடங்களுக்கு தியானம் செய்யவும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு உடலில் கொழுப்பை எரிப்பதற்கும் பயனளிக்கும்.
  • இரவு நேர உணவில் சர்க்கரை, கார்போஹைட்ரேட்ஸ் இடம்பெற கூடாது. முடிந்தவரை பழங்கள், காய்கறிகளை சாப்பிடவும்.
  • இரவில் தூங்கும் முன்பாக செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருப்பது நல்ல பழக்கம் கிடையாது. இது நம் இயல்பான தூக்கத்தை கெடுக்கும். செல்போன் வெளிச்சம் உடலில் மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்து தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இதனால் ஏற்படும் மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
  • வேலையை சீக்கிரமாக முடித்து தூங்கினால் உடலில் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்பட்டு எடை வேகமாக குறையும்.

மேலும் படிங்க  முள்ளங்கி சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படுவது ஏன் ? வேறு எப்படி சமைத்து சாப்பிடலாம் ?

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com