பெண்களின் உடலில் மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் ஒரு இயற்கையான செயல்முறை. இந்த நாட்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக மாதவிடாய் நாட்களில் த்ரெடிங் அல்லது வாக்சிங் செய்ய கூடாது என்று கூறுவார்கள். காரணம் இது உடலில் அதிகமாக வலியை ஏற்படுத்தும். அதே போல மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபட்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது போல பல விஷயங்கள் மாதவிடாய் காலத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும். அந்த வரிசையில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 5 அடிப்படை விஷயங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
மாதவிடாய் நாட்களில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது ஹெவி வெயிட் லிப்டிங் செய்வது உடலுக்கு களைப்பை ஏற்படுத்தும். இந்த நாட்களில் உடல் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கும், எனவே லேசான யோகா அல்லது நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். அதிகப்படியான உடல் சக்தி செலவழிப்பது வலி மற்றும் இரத்தப்போக்கை அதிகரிக்கும்.
மாதவிடாய் காலத்தில் உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் சாப்பிடுவது வயிற்று வலி மற்றும் உடல் வீக்கத்தை ஏற்படுத்தும். காபி, அதிக காரம் உள்ள உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக, இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.
மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் மற்றும் தூய்மை மிகவும் முக்கியம். சுத்தமற்ற சேனிடரி பேட்ஸ் அல்லது டேம்பூன்களை பயன்படுத்துவது தொற்று நோய்க்கு வழிவகுக்கும். ஒவ்வொரு 4 - 6 மணி நேரத்திற்கும் பேட் மாற்றவும், தண்ணீரில் சுத்தமாக கழுவவும். உடலின் தூய்மையை பராமரிப்பது இந்த நாட்களில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வாக இருக்கும், எனவே போதுமான ஓய்வு எடுப்பது அவசியம். தூக்கம் இல்லாதது ஹார்மோன் இடையூறுகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் உறங்குவது உடலின் வலி மற்றும் களைப்பை குறைக்க உதவும்.
மேலும் படிக்க: பெண்கள் தினமும் 1 மணிநேரம் நீச்சல் பயிற்சி செய்தால் போதும்; உடல் பிரச்னைகள் குணமாகும்
இந்த மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு ஏற்படலாம். எனவே, மன அழுத்தத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இசை கேட்பது, புத்தகம் படித்தல் அல்லது தியானம் செய்வது போன்ற ரிலாக்ஸிங் செயல்களை செய்வது மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு இயற்கையான பகுதி. இந்த நாட்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது முக்கியம். மேலே குறிப்பிட்ட 5 விஷயங்களை தவிர்ப்பதன் மூலம், இந்த மாதவிடாய் நாட்களில் வலி மற்றும் சிரமம் இல்லாமல் சமாளிக்க முடியும்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com