உலர் பழங்களை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்று கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே தெரியும். பாதாம், அக்ரூட் பருப்புகள், அத்திப்பழம் போன்றவற்றில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் உடலின் தினசரி தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆனால் உலர் பழங்களில் உள்ள காய்ந்த திராட்சையும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? திராட்சை பல பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும், பல பெண்கள் உலர் பழங்களுடன் ஒப்பிட்டு அவற்றை குறைத்து மதிப்பிடுகின்றனர். மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்கள், மில்லியன் கணக்கில் முயற்சிகள் செய்தாலும், அவர்களின் எடை அதிகரிக்கவில்லை எனும் போது, ஊறவைத்த திராட்சை ஒரு வரம் போன்றது.
இதைப் பற்றி மேலும் அறிய, உணவியல் நிபுணர் சிம்ரன் சைனியிடம் பேசினோம். அவரிடம் பேசியபோது, 'இதை இரவில் ஊறவைப்பதால் சர்க்கரை தன்மையின் அளவு குறைந்து, ஊட்டச்சத்தின் அளவு அதிகரிக்கும். எனவே திராட்சையை சாப்பிட இதுவே சிறந்த வழி. ஊறவைத்த திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர, திராட்சையை ஊறவைப்பதன் மூலம், உலர் திராட்சை குளிர்ச்சியடையும் தன்மைக்கு மாறுகிறது, இதன் காரணமாக வயிற்றிற்கு நல்ல பலன்களை ஏற்படுத்துகிறது, வயிற்றை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. உஷ்ண உடல்வாகு உள்ள பெண்களுக்கு, ஊறவைத்த திராட்சை ஒரு வரம் போன்றது. எனவே, அவற்றை ஆரோக்கியமான உணவி பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுவும் உதவலாம் :கோடையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லதா?
இரவில் தூங்கும் போகும் முன்னர் 10-12 திராட்சையை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டிய பின் இந்த நீரை குடித்துவிட்டு, திராட்சையை நன்றாக மென்று சாப்பிட்டு வரவும். திராட்சையில் உள்ள நார்ச்சத்து நமது உடலின் செரிமானத்தை மேம்படுத்துகிறது, இது நமது ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது, ஏனெனில் வயிறு ஆரோக்கியமாக இருந்தால், நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்
பலவீனமான உடல் கொண்ட பெண்களுக்கு இது ஒரு மருந்து. தினமும் திராட்சையை சாப்பிடுபவர்களின் உடல் பலவீனம் நீங்கி விடுகிறது, உங்கள் எடையும் ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கிறது. இதில் காணப்படும் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் தான் இதற்கு காரணம். அதுமட்டுமின்றி இது உடலில் உள்ள சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது.
திராட்சைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வயதாவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. இது ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தோல் தொற்று அபாயத்தைத் தவிர்க்கிறது.
ஊறவைத்த திராட்சைகளில் அனைத்து வகையான சத்தான பொருட்களும் இருக்கின்றன, அவற்றை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
திராட்சையை உட்கொள்வதன் மூலம் நீங்கள் இரத்த சோகையை எதிர்த்துப் போராடலாம் என்று நம்பப்படுகிறது. திராட்சை இரும்பின் சிறந்த காரணியாகும். இத்துடன், வைட்டமின் B காம்ப்ளக்ஸ் இதில் மிக அதிகமாக உள்ளன. அதுமட்டுமின்றி, இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும் செம்பும் இதில் உள்ளது. உங்களுக்கும் இரத்த சோகை இருந்தால், ஊறவைத்த திராட்சையை தினமும் சாப்பிடுங்கள்.
இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது என்பது நம்மை செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கிறது. உண்மையில் இது நார்ச்சத்து நிறைந்தது. நீங்கள் ஒரு கப் தண்ணீரில் 10 முதல் 12 திராட்சைகளை ஊறவைக்கலாம், இது வயிற்றை சுத்தப்படுத்துகிறது. ஊறவைத்த திராட்சையில் கலோரிகள் மிக அதிகம். எனவே, அதை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தவிர, திராட்சையில் போதுமான அளவு மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது, இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் நம் உடலின் அமில அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இது அசிடிட்டி பிரச்சனையை நீக்குகிறது.
திராட்சையை சாப்பிடுவதன் மூலமும் வாயில் இருந்து வரும் வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும். குறிப்பாக அடிக்கடி வாய் துர்நாற்றத்தால் அவதிபடுவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.
இதுவும் உதவலாம் :பூசணி விதைகள் பெண்களுக்கு ஏன் நல்லது தெரியுமா?
திராட்சையை தினமும் சாப்பிட்டு வர கண் பார்வையும் மேம்படும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A, பீடாகரோட்டின் மற்றும் கரோட்டினாய்டுகள் இதில் காணப்படுகின்றன, அவை கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com