பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் தான் பீட்ரூட் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. ஆனால் வெயில் காலத்தில் பீட்ரூட்டை சாறாக அருந்தலாமா? உங்கள் மனதிலும் இதே கேள்வி எழுகிறது என்றால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதை பற்றி மேலும் அறிய, ஃபேட் டு ஸ்லிம் குழுமத்தைச் சேர்ந்த செலிபிரிட்டி இன்டர்நேஷனல் டயட்டிஷியனும் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருமான ஷிகா அகர்வால் ஷர்மாவிடம் பேசினோம். பீட்ரூட்டை கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சாப்பிடலாம் என்று அவர் கூறுகிறார். பீட்ரூட் பல நன்மைகளை தரும் ஒரு சிறந்த காயாகும். ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது நமக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், பீட்ரூட் சாற்றை எப்போது குடிக்க வேண்டும், எப்படி குடிக்க வேண்டும் என்பதை அறிய, முழு கட்டுரையையும் கண்டிப்பாக படிக்கவும்.
இதுவும் உதவலாம் : வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோடையில் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் எல்லா விதமான பருவத்திலும் பீட்ரூட்டை உட்கொள்ளலாம். கோடை காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பீட்ரூட் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்யத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது. இந்த விஷயத்தை பொறுத்தவரை, நீங்கள் தினமும் ஒரு பீட்ரூட் உட்கொள்வது, உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாது.
அளவாக உட்கொள்ளவும்
சோடியம் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்-C, வைட்டமின்-B மற்றும் சல்ஃபர் பீட்ரூட்டில் உள்ளது. இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் கோடையில் பீட்ரூட்டை சாறாக சாப்பிடலாம். ஏனெனில் இது உடல் ஆரோக்கியத்திற்கும், நம் சரும ஆரோக்யத்திற்கும் நன்மை செய்கிறது. ஆனால் அதை அதிகப்படியாக உட்கொள்ளக்கூடாது. பீட்ரூட் ஜூஸ் வாரம் ஒருமுறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பீட்ரூட்டை உட்கொள்வது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகுந்த பயனை தருகிறது. பீட்ரூட்டில் உள்ள வைட்டமின்-B, ஜிங்க், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள கலோரிகள் அளவு மிகக் குறைவு. செம்பு,மெக்னீசியம் ஆகியவை பீட்ரூட்டில் காணப்படுகின்றன, இவை எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதுவும் உதவலாம் : கிட்னியின் நச்சுக்களை டீடாக்ஸ் செய்ய உதவும் சிறந்த ஜூஸ்கள்
எந்த நேரத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்
நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் காலையில் ஜூஸ் குடிக்கலாம். காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம், சாற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைத்து விடுகின்றன. உங்களுக்கு காலையில் ஜூஸ் குடிக்க நேரமில்லை என்றால் மாலையிலும் குடிக்கலாம். ஆனால் இரவு உணவுக்குப் பிறகு பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik