நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது பல் வலி. நமக்கு தலைவலி, காது வலி போன்றவற்றை ஏற்பட்டால் அந்த பகுதிகளில் மட்டும் தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பல் வலி அது போன்றில்லை. பல் வலி தொடங்கிவிட்டாலே காது மற்றும் தலை வலி உடன் சேர்ந்துவிடும். காலை மற்றும் இரவு என இருவேளைகளில் பல் துலக்கினாலும் பல நேரங்களில் வலியை நாம் அனுபவிக்க நேரிடும். குறிப்பாக பல் வலி வந்தாலே தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு பெரும் வலியை நமக்கு ஏற்படுத்தும். பல நேரங்களில் பல் வலிகளோடு பற்கூச்சம், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்பை சந்திக்க நேரிடும். என்ன தான் நாம் பல் வலியைக் குணப்படுத்துவதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் வீட்டிலும் சில வைத்திய முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
பல் வலிக்கான வீட்டு வைத்திய முறைகள்:
- தொண்டை புண்களை சரிசெய்வதற்கு மட்டுமல்ல, பல் வலியைக் குணப்படுத்தவும் உப்பு தண்ணீர் சிறந்த தேர்வு. வெதுவெதுப்பான நீரில் உப்பைக் கலந்துக் கொள்ளவும். பின்னர் சூடு பொறுக்கும் அளவிற்கு வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். உப்பு கிருமிநாசினியாக செயல்பட்டு பற்களில் வீக்கம் ஏதேனும் இருந்தால் சரி செய்கிறது.
- பல் வலி என்றவுடனே நாம் வீடுகளில் தேடும் மூலிகைகளில் ஒன்று கிராம்பு. உங்களுக்கு வலி அதிகமாக இருக்கும் போது 2 கிராம்புகளை எடுத்து பற்களின் இடுக்குகளில் வைக்கவும். லேசாக கடித்து வைக்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல் வலிக்கு தீர்வாக அமைகிறது.
- கிராம்பு போன்று பூண்டும் பல் வலிக்கு சிறந்த தேர்வு. நீங்கள் பூண்டு அரைத்து பேஸ்ட்டாகி வலி அதிகம் உள்ள இடங்களில் தடவி வரவும். தொடர்ந்து 2 நாட்களுக்கு செய்து வந்தால் வலி குறையக்கூடும்.
- பல் வலிக்கு மற்றொரு சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்று கொய்யா இலை. உங்களால் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும் கொய்யா கொழுத்தில் உப்பு வைத்து சாப்பிட்டு அந்த தண்ணீரை குடித்துவிடும். அதுவும் பல் அதிகமாக வலிக்கும் இடத்தில் வைத்து மெல்ல வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது பற்களில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை அகற்றி பல் வலியைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.
- ஒருவேளை உங்களுக்கு கொய்யா இலைகளை பச்சையாக மெல்வதற்கு பிடிக்கவில்லை என்றால், தண்ணீருடன் உப்பு மற்றும் கொய்யா இலைகளைச் சேர்த்து கொதித்து வைத்து வாய் கொப்பளிக்கவும்.
- பற்களில் வலி அதிகமாக இருக்கும் வெற்றிலை மற்றும் உப்பு சேர்த்து மென்று அதன் சாறைக் குடிக்கவும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பல் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது.
- அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ப்ரஸ்களைக் கொண்டு பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தக் கசிவு மற்றும் வீக்கம் ஏற்படும். ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்பதற்கு ஏற்ப பல் வலியைக் குறைப்பதற்கு வேப்பங்குச்சி மற்றும் ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கவும்.
இது போன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலும் வலியைத் தொடர்ந்து அனுபவிக்க நேரிட்டால், மருத்துவமனைக்குச் செல்லவும். மேலும் வலி அதிமாக இருக்கும் இடங்களில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தனம் கொடுப்பதும் வீக்கம் மற்றும் வலிக்கு தீர்வாக அமையும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation