herzindagi
image

பழைய சோறு உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

உடஷ் உஷ்ணமும் முதல் ரத்த அழுத்தம் சீராகுதல், வயிற்றுச் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன்னதாக கொஞ்சமாக பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் போதும். எவ்வித செலவும் இன்றி பல உடல் நலத்தைப் பாதுகாப்போடு வைத்திருக்க முடியும்.
Editorial
Updated:- 2025-11-24, 22:54 IST

நம்முடைய மூதாதையர்கள் 70 வயதானாலும் கம்பீரமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று அவர்களிடம் ஒருமுறை கேட்டுப்பாருங்களேன். கொஞ்சம் கூட யோசிக்கமால் வேற என்னப்பா? நாங்க சாப்பிட்ட சாப்பாடு தான். அதிலும் பழைய சோறு, கேப்பை கூழ், கம்பங்களி போன்ற உணவுகள் உடலுக்கு ஆற்றலைக் கொடுப்பதோடு ஆரோக்கியத்திற்கும் பேருதவியாக உள்ளது. என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

 


பழைய சோறும் ஆரோக்கிய நன்மைகளும்:

  • குளிர்காலங்களில் கூட சிலருக்கு உடல் அதீத வெப்பமான தன்மையுடன் இருக்கும். இந்த நேரத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியையும், ஆற்றலையும் பெற வேண்டும் என்றால் கட்டாயம் பழைய சோறு சாப்பிடவும்.
  • தயிர் மற்றும் மோர் சாதம் போன்றில்லாமல் பழைய சோறில் ஒரு வித புளிப்புச் சுவை இருக்கும். நாவிற்கு சுவையைக் கொடுப்பதோடு இதில் அதிகளவு புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

மேலும் படிக்க: அதிகரிக்கும் பசி, அதீத சோர்வு; நீரிழிவு நோயின் 5 முக்கிய அறிகுறிகள்

  • காலையில் வெறும் வயிற்றில் பழைய சோறு உட்கொள்ளும் போது வயிறு சம்பந்தப்பட்ட பல நோய்களுக்குத் தீர்வாக அமையும். வயிற்றுப்புண், அஜீரணம், வாந்தி போன்ற அனைத்து விதமான வியாதிகளுக்கும் பழைய சோறு தீர்வாக உள்ளது.
  • புரதம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களுடன் நார்ச்சத்துக்களும் அதிகளவில் உள்ளது. எனவே காலை எழுந்தவுடன் நீர் ஆகாரம் அல்லது கொஞ்சமாக பழைய சோறு சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. மேலும் உடல் சோர்வை போக்கி நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியான சூழலை ஏற்படுத்துகிறது.

Image source - Free

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com