herzindagi
jaggery benefits in tamil

Jaggery Benefits : வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

வெல்லம் குளிர்காலத்தில் மட்டுமே நன்மை பயக்கும் என்றல்ல, கோடை காலத்திலும் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்...  
Editorial
Updated:- 2023-04-08, 08:22 IST

உங்கள் கோடைகால உணவில் வெல்லம் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெல்லத்தில் உள்ளன, எனவே இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு நிவாரணம் தருகிறது மற்றும் உங்கள் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது.

மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகிறது

பெரும்பாலான மக்களுக்கு மலச்சிக்கல் அல்லது வேறு செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கட்டாயமாக உங்கள் உணவில் வெல்லத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். வெல்லம் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது மற்றும் உங்கள் குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு, ஒரு சிறு வெல்லக்கட்டியை சாப்பிடுவது நல்லது.

இதுவும் உதவலாம் :கோடையில் வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் அற்புத பானம்

காய்ச்சலை எதிர்த்துப் போராடுகிறது

jaggery for periods

நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் இன்று தொற்றுநோய் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் எதிர்ப்பு சக்தி என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதன் பயனால், உங்கள் உடல் அனைத்து நோய்களையும் எதிர்த்து போராடுகிறது. எனவே எதிர்ப்பு சக்தியை உடலில் தக்க வைத்துக் கொள்ள, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஊக்கிகள் தேவைப்படுகின்றன. கோடைக்காலத்தில் காய்ச்சல் போன்ற பல நோய்கள் நமை அச்சுறுத்தும். அத்தகைய காலநிலையில் உங்கள் உணவில் சிறிது வெல்லத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். காலை, மாலை நாம் குடிக்கும் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் குடித்தால், சுவை அதிகரிக்கும், அதே சமயம் பல தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது

கோடையில் வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பது மிகவும் கடினமான செயல் ஆகும். வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் வெல்லத்தை சேர்க்கலாம். ஆனால் குளிர் காலத்தில் வெல்லம் சாப்பிடுவது, உடலை சூடுபடுத்துமா? அப்படியானால் அதை கோடையில் எப்படி சாப்பிட முடியும், இந்தக் கேள்வியும் மனதில் எழுகிறதா? வெயில் காலத்தில் வெல்லம் கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் வெல்லத்தை ஊறவைக்க வேண்டும். தண்ணீரில் வெல்லம் கரைந்து விடும். இதனால் உங்கள் உடலில் வெப்பம் ஏற்படாது. மறுபுறம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துளசி விதைகளை அதில் ஊற வைக்கவும். வெல்லம் தண்ணீரை வடிகட்டி, அதில் துளசி விதைகள், எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து குடிக்கவும். உங்களுக்காக மற்றொரு கோடைகால பானம் தயாராகி விட்டது. இது உங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

மாதவிடாய் பிடிப்புகளுக்கு நல்லது

jaggery for cold

வெல்லத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு மாதவிடாயின் போது வலி இருந்தால், நீங்கள் வெல்லம் சாப்பிடுவது நல்லது. தசைப்பிடிப்புகளில் இருந்து விடுபட, தினமும் ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டு வரலாம். இது எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுகிறது. உங்கள் மனநிலையை சரிசெய்ய உதவுவதோடு, மாதவிடாய் தொடர்பான மற்ற பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுவும் உதவலாம் :நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

உடலுக்கு சக்தியை தரும்

நம்மில் பலர் கோடையில் சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதால், அது நமக்கு புதிய சக்தியை தருகிறது. ஆனால் சர்க்கரை பானங்கள் குடிப்பதால் கிடைக்க போகும் பலன் சிறிது நேரம் தான் நீடிக்கும் மற்றும் இதனால் உங்கள் உடலில் கலோரிகள் அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, கோடையில் உடல் சக்தியின் அளவை அதிகரிக்க, சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லத்தைப் பயன்படுத்துங்கள். காலையில் ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டால், உடனடி சக்தி கிடைக்கும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெல்லம் ஒரு கார்போஹைட்ரேட்டு கலவை ஆகும், இது உங்கள் உடலுக்கு புதிய தெம்பை கொண்டுவருகிறது மற்றும் அதன் பலன் உடலில் நீண்ட காலம் நீடிக்கும். இத்துடன், இது நம் உடல் பலவீனம் மற்றும் சோர்வினை போக்குகிறது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com