நம் வீட்டில் பெரியவர்கள் நெய்யை சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகளை பற்றி எப்போதும் சொல்லி கொண்டே இருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் நெய் சாப்பிடுவதைக் கேட்டாலே நாம் அனைவரும் பயந்து நடுங்க தொடங்கி விடுகிறோம். நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடி விடும் என்ற பயத்தில் தான் பெரும்பாலானோர் இதை தவிர்ப்பதற்கு காரணம் ஆகிறது. உண்மையில் அப்படி தான் நடக்குமா? நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? நெய் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உங்களுக்கும் இதுபோன்ற சில கேள்விகள் இருந்தால் இன்றைய கட்டுரையில் இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடும்.
நெய் பல ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரன் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பற்றிய ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் இந்த கேள்விகளுக்கான பதில்களை அளித்துள்ளார். நிபுணரின் கருத்தை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதுவும் உதவலாம் :ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
நெய் நம் சமையலறையில் இருக்கும் ஒரு சிறந்த உணவு. நெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று கருதி அடிக்கடி நெய் சாப்பிடுவதை பெரும்பாலானவர்கள் நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இது ஒரு கட்டுக்கதை. நெய்யில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. நம் உடலுக்கு மிகவும் அவசியமான, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் A, D மற்றும் K உள்ளிட்டவை நெய்யில் நிறைந்துள்ளது. நம் உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான இதுபோன்ற பல சத்துக்கள் இவற்றில் காணப்படுகின்றன. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நெய்யை நம் உணவில் ஒரு அங்கமாக வைத்துக் கொண்டால், அதன் மூலம் நாம் பல நன்மைகளைப் பெறலாம்.
நெய் ஆன்டி ஃபங்கல், ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொண்டது. அவை சளி, காய்ச்சல் மற்றும் இருமலை எதிர்த்துப் போராட நம் உடலுக்கு உதவி செய்கின்றன.
நெய்யில் உள்ள ஆரோக்கியமான சாட்சுரேட்டட் கொழுப்புகள் நமது சிந்தனை சக்தியை பலப்படுத்துகிறது. அவை செல் பழுதடைதலை குறைக்கின்றன மற்றும் நம் ஆயுளை அதிகரிக்கின்றன. இது நமது செல்களுக்கு புதிய சக்தியை அளிக்கிறது, நமது உடலின் குணப்படுத்தும் தன்மையை பலப்படுத்துகிறது.
நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளது. இது இயற்கையாகவே நமது சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது மற்றும் சருமம் வயதாவதை குறைக்கிறது.
இதுவும் உதவலாம் :பெண்களின் எலும்பு மற்றும் பற்கள் வலுபெற சாப்பிட வேண்டிய உணவுகள்
நெய் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை அதிகமாக சாப்பிடக்கூடாது. தினமும் 2 ஸ்பூன் நெய்யை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com