herzindagi
banana eating

benefits of bananas: தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா?

வாழைப்பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Editorial
Updated:- 2023-12-14, 19:11 IST

நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் பல மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்கள் முதல் காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொன்றிருக்கும் ஒர் அற்புத குணங்கள் உள்ளதால் தான் 90 வயதிலும் தளராது வாழ்த்து வந்துள்ளனர் நம்முடைய மூதாதையர்கள்.

இந்த வரிசையில் இன்றைக்கு முக்கனிகளில் ஒன்றான வாழையின் அற்புத குணங்கள் மற்றும் இவற்றைத் தினமும் சாப்பிடும் போது என்னென்ன நன்மைகள்? என நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள்.

 healthy banana tips

வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளின் லிஸ்ட்:

  • வாழைப்பழம் என்றாலே செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காண உதவும் பழம் என்பது மட்டும் தான் அனைவரின் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் இதில் உள்ள கலோரிகள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக்குவது முதல் உடல் எடையைக்குறைப்பது வரை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • வாழைப்பழங்களில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து குடலில் இயக்கத்தைச் சீராக்குகிறது. எனவே தினமும் இரவு தூங்கும் முன்னர் ஒரு வாழைப்பழத்தை நீங்கள் சாப்பிட வேண்டும்.இது மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது. 
  • நாம் சாப்பிட தவறும் போது தான், இன்றைக்கு மூலம், பௌத்திரம், வயிறு உப்பிசம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
  • உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்பதற்கான இன்றைக்கு  பல்வேறு உடற்பயிற்சிகளைத் தினமும் பலர் மேற்கொள்கிறார்கள். ஆனாலும் பசி எடுக்கும் சமயத்தில் நொறுக்குத் தீனிகள் மீது தான் ஆர்வம் அதிகரிக்கும். இதைக்கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வாழைப்பழம் உங்களுக்கு சிறந்த ஸ்நாக்ஸாக உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிங்க: 30 வயதை அடைந்த பெண்களாக நீங்கள்? அப்ப இத மறந்திடாதீங்க..!

  • உடற்பயிற்சி செய்யும் போது மக்கள் அதிக நேரம் உட்கார்ந்த நிலையில் பணிபுரியும் போது அடிக்கடி தசைப்பிடிப்பு, உடம்பு வலி போன்றவை ஏற்படும். இவற்றிற்குத் தீர்வு காண்பதற்கு நீங்கள் வாழைப்பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய தசை இயக்கத்தைச் சீராக்கவும், எலும்புகள் வலுப்பெறவும் உதவியாக உள்ளது.
  • வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் மனித மூளையின் செயல்திறனை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

banana healthy fruit

எத்தனை பழங்கள் சாப்பிட வேண்டும்?

வாழைப்பழத்தில் இதுப்போன்று பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் ஒரு நாளைக்கு நான்கு பழங்கள் சாப்பிடுவது மக்களுக்குப் பாதுகாப்பானது. மேலும் அத்தியாசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருந்தாலும் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களையும் உங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க: குளிர்காலத்தில் அதிகரிக்கும் இதய பாதிப்புகள்;எச்சரிக்கும் மருத்துவர்கள்!

எட்டாக்கனிகளின் வரிசையில் வாழைப்பழம் இடம் பெறவில்லை. எனவே இனி வரும் காலங்களில் உடல் ஆரோக்கியத்திற்காகவே தினமும் உங்களது உணவு முறையில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள். 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com