herzindagi
women care

30 s women healthy habit:30 வயதை அடைந்த பெண்களாக நீங்கள்? அப்ப இத மறந்திடாதீங்க..!

பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரிந்தாலும், 30 வயதை அடைந்துவிட்டால் பெண்களுக்குப் பக்குவம் தானாய் வந்துவிடும்.
Editorial
Updated:- 2023-12-15, 22:27 IST

ஒவ்வொரு பெண்ணுக்கும் 30 வயது என்பது அவர்களது வாழ்க்கையின் முக்கிய பகுதியாகும். பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரிந்தாலும், 30 வயதை அடைந்துவிட்டால் பக்குவம் தானாய் வந்துவிடும். பணிக்குச் சென்றாலும் தினசரி வாழ்க்கையை நிர்வகிப்பது முதல் குடும்பத்தைக் கவனிப்பது மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பு, சமூக பிரச்சனைகளைக் கடந்து செல்வது என அத்தனையும் சமாளிக்கும் வயது தான் இது. பெற்றோர்களின் உதவிகள் இருந்தாலும் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை ஒரு பெண் தானாக எடுக்கும் காலமாக இந்த வயது அமைகிறது.

women health care

இது ஒருபுறம் இருந்தாலும் உடல் ரீதியாகவும் பல்வேறு சவால்களையும் அவர்கள் சந்திக்கும் வயது 30  என்று கூறலாம். இதய பாதிப்பு  முதல் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும். எனவே ஒருபோதும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. குடும்ப பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்று உடல் ஆரோக்கியத்திலும் இருக்க வேண்டும். இந்நேரத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக என்னென்ன விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

மேலும் படிக்க: தினமும் முடி கொட்டுவதற்கானக் காரணம் தெரிஞ்சுக்கணுமா?அப்ப முதல்ல இத படிங்க!

30 வயதில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வஷயங்கள்:

சத்தான உணவு உட்கொள்ளுதல்:

  • ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உணவு முறையில் அக்கறையுடன் இருக்க வேண்டும். உடலுக்கு ஆரோக்கியத்தைச் சேர்க்கும் பச்சைக் காய்கறிகள், பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • 30 வயதை எட்டியவுடன் முதுகு வலி பிரச்சனை என்பது அதிகரிக்கும் என்பதால், உளுந்தப்பருப்பில் செய்யக்கூடிய களி, சாப்பாடு போன்றவற்றை உங்களது உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதில் போலிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
  • வெளியில் செல்லும் போது ஜங்க் உணவுகளை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இதனால் உங்களது உடல் எடை அதிகரிக்கக்கூடும். இதுவும் பல்வேறு நோய்களுக்கு ஒரு வழியாக அமையக்கூடும்.
  • புரோட்டீன்,புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், அயர்ன் போன்ற  முக்கிய ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

healthy food women

சர்க்கரையைத் தவிர்க்கவும்:

  • சர்க்கரையை அதிகளவில் உட்கொள்ளும் போதே பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளையும் நாம் விலைக் கொடுத்து வாங்குகின்றோம் என்று தான் அர்த்தம்.
  • சர்க்கரையைப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், எடை அதிகரிப்பு, கல்லீரல் கொழுப்பு தேங்குதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே 30 வயதை அடைந்தவுடன் உங்களது உணவுமுறையில் சர்க்கரை உட்கொள்ளுதலைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது.

வழக்கமான உடற்பயிற்சி:

  • பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் தான். இது ஒவ்வொரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. அதுவும் 30 வயதை அடைந்தால் கட்டாயம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • வாக்கிங், யோகா, ஸ்கிப்பிங், ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை நீங்கள் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

women exercise

நல்ல தூக்கம்:

  • முறையான தூக்கம் இல்லாதது பல நோய்களுக்கு வழிவகுக்கும். நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டே பணியில் ஈடுபடும் போது அதிக மன உளைச்சல் ஏற்படும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு முறையாக தூக்கம் தேவை என்பதால் இரவில் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இது நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைப்பதோடு உடல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. 

மேலும் படிக்க: 2023 ல் கூகுளில் தேடப்பட்ட டாப் 10 ரெசிபியின் லிஸ்ட்!

சுய அன்பைப் பேணுதல்:

  • 30 வயதை அடைந்த ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தோன்றக்கூடிய விஷயம் என்றால், வயதாகிவிட்டது என்பது தான். இதோடு அழகாக இல்லையோ? என்ற ஏக்கமும் இருக்கும். இதுப்போன்ற மனநிலையும் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் உங்களை நீங்கள் எப்போதும் காதலிக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், உங்களுக்கு சரியானதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசி மகிழுங்கள். இது உங்களின் மனதை சந்தோஷமடைய செய்யும்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com