herzindagi
heart attack problem

winter heart care: குளிர்காலத்தில் அதிகரிக்கும் இதய பாதிப்புகள்;எச்சரிக்கும் மருத்துவர்கள்!

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு மாரடைப்பும் ஏற்படுகிறது.
Editorial
Updated:- 2023-12-15, 22:25 IST

குளிர்காலம் வந்து விட்டாலே சளி, இருமல்,தொண்டை வலி, காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ் பிரச்சனைகள் நமக்கு ஏற்படக்கூடும். வெயிலின் தாக்கம் குறைவதால் உடல் சோர்வும் ஏற்படும். இதுப்போன்ற பாதிப்புகள் மட்டுமில்லாது குளிர்காலத்தில் இதய பாதிப்புகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏன்? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறிந்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்..

Heart diseasses

குளிர்காலத்தில் ஏற்படும் இதய பாதிப்பு:

  • கடந்த இரண்டு நாள்களாகவே குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. உடல் நடுங்கும் அளவிற்கும் கூட அதிகாலையில் குளிர் நம்மைப் பாடாய் படுத்துகிறது. இந்த குளிர் இதய செயல்பாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை குறையும் போது, இரத்த நாளங்கள் சுருங்குவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
  • இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனிகளும் குளிர்காலத்தில் பாதிப்பை சந்திக்கிறது. இதுவும் இதயத்தில் வலி ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

மேலும் படிக்க: குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் முறை இது தான்!

இதய பாதிப்பிற்கான அறிகுறிகள்:

  • மார்கழி மாதம் தொடக்கத்திற்கு முன்னதாக கடும் குளிரை அனுப்பவித்து வருகிறோம். இதய பாதிப்பிற்கு முக்கிய காரணமான இந்த குளிரினால் பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். 
  • குளிர்காலத்தில் அதிகாலை எழும் போது மார்புப் பகுதியில் ஒரு வித வலி ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக அதிக வலியை நீங்கள் அனுபவிக்க நேரிடுவதும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • சைனஸ், வீசிங், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது. மூச்சு விடும் போது லேசான விசில் சத்தம் வந்துக் கொண்டே இருக்கும். ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக அன்றாட சில பணிகளைச் செய்யும் போது மற்றும் நடக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
  • குளிர்காலத்தில் வெளியில் செல்லும் போது குளிருக்கு இதமான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

heart winter

  • வைட்டமின் டி குறைபாடு காரணமாக குளிர்காலத்தில் உடலின் சோர்வு அதிகமாக இருக்கத்தான் செய்யும். இரவு முழுவதும் நல்ல தூங்கிய பின்னதாகவும் உங்களை அறியாமலே உடல் சோர்வு காயைிலும் நீடிக்கும். ஒன்றிரண்டு நாள்கள் இருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. வைரஸ் தொற்றாகக்கூட இருக்கலாம். அதே சமயம் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதயத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

  • உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு பச்சைக் காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக கொலஸ்ட்ராலும் உடல் நலத்தைப் பாதிக்கும். எனவே எண்ணெய் பலகாரங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • குளிர்காலங்களில் நடைப்பயிற்சிக்காக வெளியில் செல்வது என்பது முடியாதக் காரணம். இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே குறைந்தது 30 நிமிடங்களுக்காவது ஏதேனும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • உடலில் அதிக படபடப்பு, வலி போன்ற அசௌரியமான சூழல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க: 30 வயதை அடைந்த பெண்களாக நீங்கள்? அப்ப இத மறந்திடாதீங்க..!

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com