
பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் எப்போதும் முதன்மையாக விளங்குகிறது கற்றாழை. பேஸ் வாஸ், ஷாம்பு என எதை எடுத்தாலும் கற்றாழையில் சிறிய பங்களிப்பாவது நிச்சயம் இருக்கும். இன்றைக்கு கற்றாழை எப்படி முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது? எப்படியெல்லாம் சருமத்தைப் பொலிவாக்க பயன்படுத்தலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
ஆலோ வேரா அதாவது கற்றாழையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள முகப்பருக்களை அகற்றி எப்போதும் மென்மையாகவும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Hair Care Tips: கூந்தலை வலுப்படுத்த உதவும் வெந்தயம்; ஹோம்மேட் ஹேர்பேக் மற்றும் சீரம் தயாரிக்க எளிய குறிப்புகள்
குளிர்காலத்தில் சரும வறட்சியைப் பெண்கள் அதிகளவில் சந்திக்கக்கூடும். முகம் வறண்டு விடுவதால் சுத்தமாக எண்ணெய் பிசுபிசு தன்மையே நிச்சயம் இருக்காது. சில நேரங்களில் சருமத்தின் தோல்கள் ஒன்றையொன்று பிடித்து இழுத்தாற்போன்று வலியையும் கொடுக்கும். இந்த நேரத்தில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கற்றாழை ஜெல்லை தேய்த்து அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிந்த நீரால் முகத்தைக் கழுவும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும பொலிவைத் தருகிறது.
கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை கலந்து பேஸ் பேக் தயாரிக்கவும். இதை வாரத்திற்கு இருமுறையாவது பயன்படுத்தவும். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது.
மேலும் படிக்க: Hair Care Tips: கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்; வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்?
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள கற்றாழை, தேன் மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றை சரும பராமரிப்பிற்கு உபயோகிக்கும் போது, முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவியாக உள்ளது. மேலும் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், கற்றாழை ஜெல், தேன், இலவங்கப்பட்டை போன்றவற்றை முகத்தில் கலந்து தேய்க்கும் போது நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லிற்கு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் பண்புகள் உள்ளது. எனவே சருமத்தைப் பொலிவுடனும், முகப்பருக்கள் இன்றி பாதுகாக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு ஒரு முறை கற்றாழை ஜெல், தேங்காய் பால் மற்றும் சரக்கரை போன்ற அனைத்தையும் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com