குளிர்காலம் என்பது பலருக்கும் பிடித்தமான பருவமாக உள்ளது. இந்த சீசனில் பசி அதிகம் எடுக்கும். விதவிதமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். குறிப்பாகக் குளிர்காலத்தில் சூடாக டீ, காபி குடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த சீசனில் உடல் எடை அதிகரிப்பது முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. நீங்களும் இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லையா? குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் விவரிக்கிறோம். படித்து பயனடையுங்கள்.
குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பருவக்கால பாதிப்புக் குறைபாடு. இந்த சீசனில் மிகவும் சோம்பலாக உணர்வோம். இது மனநிலையை பாதித்து ஆற்றல் அளவையும் குறைக்கிறது. உடலுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்காதபோது இது மனநிலை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இதன் காரணமாக நீங்கள் சுறுசுறுப்பாக உணரமாட்டீர்கள், அதனால் உடல் எடை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும்.
குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. உண்மையில், இந்த சீசனில் அதிகப்படியான பசி, இனிப்பு மற்றும் வறுத்த உணவுகளைச் சாப்பிட ஆசையாக இருக்கும். இதனால் தேவைக்கு அதிகமாக கலோரிகளை எடுத்துக் கொண்டு, போதுமான உடற்பயிற்சி செய்யாதபோது எடை அதிகரிக்க தொடங்குகிறது. குளிர்காலத்தில் அதிக கலோரிகளை உட்கொள்வதே எடை அதிகரிக்க காரணம்.
அதிக தூக்கம் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த சீசனில், படுக்கையை விட்டு சீக்கிரம் எழு மனம் வராது. தேவையை விடவும் அதிகமாக தூங்குவோம். ஆனால் அதிக தூக்கம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது உடல் சுழற்சி முறையைப் பாதித்து உங்களைச் சோம்பலாக உணர வைக்கும். இதன் காரணமாக குளிர்காலத்தில் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது.
குளிர்காலத்தில் அதிகப்படியான டீ அல்லது காபி உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும். குறிப்பாக இந்த சீசனில் அடிக்கடி சூடாக ஏதாவது குடிக்க ஆசையாக இருக்கும். அதனால்தான் டீ அல்லது காபியை அதிகம் குடிக்கிறோம். ஆனால் டீ, காபி போன்றவற்றை உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து குறையும். உடல் நீரிழப்பு காரணமாக உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாகிறது. இது தவிர, டீ, காபியில் சர்க்கரை போன்றவற்றைச் சேர்ப்பதால் கலோரிகள் அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்:தினசரி பச்சையாகப் பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்
குளிர்காலத்தில் பலரும் தங்கள் உடலைச் சூடாக வைத்துக்கொள்ள அடிக்கடி மது அருந்துகிறார்கள். ஆனால் அதிகப்படியான மது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடல் எடையையும் அதிகரிக்க செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, முடிந்த வரை மது அருந்துவதைத் தவிர்க்கவும். மேலும் இது பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
எனவே, குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதை மனதில் கொண்டு குளிர்காலத்தில் உடல் எடையை முறையாகப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:15 நிமிடத்தில் தொப்பையை ஒல்லி பெல்லியாக மாற்ற வேண்டுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com